ETV Bharat / sitara

நடிகர் சுனில் ஷெட்டியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்! - நடிகர் சுனில் ஷெட்டியின் வீடு

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தனது குடும்பத்துடன் வசித்து வரும் வீட்டின் கட்டிடத்தை மும்பை மாநகராட்சியினர் சீல் வைத்துள்ளனர்.

Suniel
Suniel
author img

By

Published : Jul 13, 2021, 8:19 AM IST

மும்பை: ரஜினியின் 'தர்பார்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலிவுட் பிரபலம் சுனில் ஷெட்டி. இவர், தெற்கு மும்பையின் அல்தமவுண்ட் சாலையில் உள்ள பிருத்வி அடுக்குமாடி குடியிருப்பில் 18ஆவது மாடியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்த குடியிருப்பு பகுதியில் 30 மாடிகளில் 120 வீடுகள் உள்ளன. கடந்த சில நாள்களாக இந்தக் குடியிருப்பில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மும்பை மாநகராட்சியின் கோவிட் -19 தடுப்பு விதிகளின் படி, ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தில் ஐந்துக்கும் அதிகமான நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் பாதுகாப்பு கருதி அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க வேண்டும். இந்த விதிப்படி தற்போது சுனில் ஷெட்டி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநகராட்சியினர் சீல் வைத்துள்ளனர்.

இதுகுறித்து மும்பை மாநகராட்சியின் உதவி ஆணையர் பிரசாந்த் கெய்க்வாட் கூறுகையில், "கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதையடுத்து பிருத்வி அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

  • My building is safe and the family is fine. One wing has a notice up but NOT entire building sealed as being misreported. My mother, my wife Mana, #Ahan, #Athiya & my staff; as well as the entire Bldg are fine & thank U for your good wishes. Sorry folks no #DELTA

    — Suniel Shetty (@SunielVShetty) July 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாதுகாப்பு நலன் கருதி இங்கிருக்கும் மக்கள் யாரும் வெளியவர அனுமதியில்லை. இந்த குடியிருப்பு வளாகத்திற்கு வெளியே காவல்துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுனில் ஷெட்டியும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக உள்ளனர்" என்றார்.

மும்பையில் இந்த கட்டிடம் போன்று மேலும் சில ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாநகராட்சியினர் சீல் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொடுத்து உதவிய ரஜினி பட வில்லன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.