ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் மீதான தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து-வருகின்றனர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பதிவுசெய்து-வருகின்றனர். இதனிடையே பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாய் திறக்காமல் மவுனம் காத்துவந்த நிலையில், இணையவாசிகள் பலரும் கேள்வியெழுப்பத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சன் கையெடுத்துக் கும்பிடுவது போன்ற எமோஜியை மட்டும் பதிவிட்டிருந்தார்.
-
T 3602 - 🙏
— Amitabh Bachchan (@SrBachchan) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">T 3602 - 🙏
— Amitabh Bachchan (@SrBachchan) January 5, 2020T 3602 - 🙏
— Amitabh Bachchan (@SrBachchan) January 5, 2020
இந்த நிலையில், அமிதாப் பச்சனின் ட்வீட் பதிவைக் கண்ட பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்து ட்வீட் பதிவிட்டுவருகின்றனர். மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சமயத்தில்கூட தங்களால் வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்க இயலாதா எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தில் தாங்கள் மவுனம் காப்பது முதுகெலும்பில்லாதவர் என்ற பெயரையே பெற்றுத்தரும் என்றும் சாடியுள்ளனர்.
பேசுங்கள் வயதானவரே, வாயைத் திறக்க இயலாதா? எவ்வளவு காலம் அமைதியாக இருப்பீர்கள், படத்தில் நடிக்கும்போது மட்டும்தான் மனசாட்சி இருக்குமா என்றவாறு அமிதாப் பச்சனை இணையவாசிகள் பலரும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.