ETV Bharat / sitara

கங்கனாவின் 'மணிகர்னிகா பிலிம்ஸ்' அலுவலகத்தை இடிக்க முடிவு

மும்பை: கங்கனா ரணாவத்தின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தை இடிக்க மும்பை நகராட்சி முடிவுசெய்துள்ளது.

author img

By

Published : Sep 8, 2020, 9:46 AM IST

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

கங்கனா ரணாவத் தற்போது தனது சொந்த ஊரான இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில் தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். அங்கிருந்தவாறே சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு நீதி, பாலிவுட்டில் போதைப் பொருள்களின் பயன்பாடு, வாரிசு அரசியல், பாலிவுட்டில் நிழல் உலக தாதாக்களின் செயல்பாடுகள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தும், குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் வந்தார்.

சமீபத்தில், மும்பை காவல் துறை குறித்தும் மராட்டிய மாநிலம் குறித்தும் தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துகளை கங்கனா ரணாவத் பகிர்ந்துவந்த நிலையில், அவருக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனா, ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆகிய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து கங்கனா ரணாவத்திற்கு மத்திய அரசு 'Y plus' பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், மும்பையில் இருக்கும் கங்கணாவின் தயாரிப்பு நிறுவனமான 'மணிகர்னிகா பிலிம்ஸ்' அலுவலகத்தை நாளை (செப்டம்பர் 8) இடிக்க மும்பை நகராட்சி முடிவு செய்துள்ளதாக கடாரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "மும்பையில் உள்ள எனது மணிகர்னிகா பிலிம்ஸ் அலுவலகம் எனது 15 வருட கடின உழைப்பு. இது எனது கனவுகளில் ஒன்றாகும். நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளராக மாறினால் எனக்கு சொந்த அலுவலகம் வேண்டுமென இதை உருவாக்கினேன். ஆனால் தற்போது இந்த கனவு சிதைந்து விடும் என தோன்றுகிறது.

இன்று எனது அலுவலத்திற்கு வந்த மும்பை நகராட்சி அலுவலர்கள், யாரிடமும் அனுமதி பெறாமல் என் அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். மேலும் என் அலுவலகத்தை ஆள் முழுவதாக அளவீடு செய்துள்ளனர். எனது அலுவலகம் சட்டவிரோதமாக கட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். நாளை இதை இடிக்க இருப்பதாக எனது அலுவலக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

என்னிடம் முறையான அனைத்து ஆவணங்களும் உள்ளது. மும்பை நகராட்சிக்கு எதிராக எனது அலுவலகத்தை நான் கட்டவில்லை. அனைத்தும் சட்டத்திற்குள்பட்டு இந்த அலுவலகத்தை உருவாக்கியுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் மகாராஷ்டிர மாநில உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பை குறித்தும் மகாராஷ்டிரா குறித்தும் அவதூறு பரப்பிய நபருக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கங்கனா மும்பை நகரத்தை பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் உடன் ஒப்பிட்டதற்காகவும் இங்கு இருப்பவர்களைத் தலிபான்கள் எனக் கூறியதற்காகவும் அவர் நிச்சயம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.