ஹைதராபாத்: காதலி மலைக்கா அரோரா பிகினி குளியல் போடுவதற்கு முன் நீச்சல் குளத்தில் இறங்கிய அழகை அர்ஜுன் கபூர் புகைப்படம் பிடித்த காணொலி இன்ஸ்டாகிராமில் லைக்குகளையும், ஷேர்களையும் குவித்துவருகிறது.
சகோதரி அம்ரிதா அரோரா மற்றும் அவரது கணவர் ஷகீல் லடாக் ஆகியோருடன் விடுமுறையைக் கொண்டாட கோவா மாநிலத்திலுள்ள கன்டோலிம் பகுதியில் அமைந்திருக்கும் அவர்களுக்குச் சொந்தமான சொகுசு பங்களாவுக்குச் சென்றுள்ளனர் மலைக்கா அரோரா - அர்ஜுன் கபூர்.
அங்கு தங்களுக்கு இடையே நிகழும் மகிழ்ச்சியான தருணங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வெளியிட்டுவருகிறார் மலைக்கா. அந்த வரிசையில், வண்ணமயமான பிகியுடன் நீச்சல் குளத்தில் இறங்கும்போது அர்ஜுன் கபூர் தன்னை புகைப்படம் எடுத்ததை பூமராங் காணொலியாக தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இவர்களின் இந்த லூட்டியை படம்பிடித்தது மலைக்காவின் சகோதரி அமிர்த்தான். முதலில் இந்தக் காணொலியை இவர் தான் 'சிட்டுகள்' என்று குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்தார். இதன் பின்னர் மலைக்காவும் இந்த பூமராங் காணொலியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் இந்திய மசாலாப் பொருள்களுக்கு அடிமையான பிரிட்டிஷ் பாடகரின் மனைவி!