ETV Bharat / sitara

'புதிய இயல்பு நிலையை ஏற்றுக்கொள்வது சற்று கடினம்' - அர்ஜுன் கபூர்

மும்பை: புதிய இயல்பு நிலைக்கு நம்மை  இணைத்துக் கொள்வதற்குச் சில காலம் எடுக்கும் என நடிகர் அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் கபூர்
அர்ஜுன் கபூர்
author img

By

Published : Jul 11, 2020, 4:02 PM IST

கரோனா தொற்று நோய் அச்சம் காரணமாக இந்தியாவில் மார்ச் இறுதி வாரம் முதல் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்துவித படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, திரைப் பிரபலங்கள் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

இதனையடுத்து தற்போது மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை தொடங்கலாம் என அனுமதி அளித்துள்ளது. ஒரு சில மாநிலங்களில் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தற்போது நடிகர் அர்ஜுன் கபூர் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்குப் பிறகு விளம்பரப் படம் ஒன்றில் நடித்துள்ளார். படப்பிடிப்பில் கலந்து கொண்ட விதம் குறித்தும் அர்ஜுன் கபூர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, 'நாம் ஒவ்வொருவரும் புதிய இயல்பு நிலைக்கு மெதுவாக நம் வாழ்க்கையை இணைத்துக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அனைத்தும் மாறிவிட்டன. நம் குடும்பங்களை ஆதரிக்க நாம் வேலை செய்ய வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் சூழலை முடிந்தவரை பாதுகாப்பாக வைத்திருங்கள். இதனால், நாம் அனைவரும் பாதுகாக்கப்படுவோம்.

நான் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்குப் பிறகு விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டேன். படப்பிடிப்பின்போது அவர்கள் கடைப்பிடித்த பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்டு நான் நிம்மதி கொண்டுள்ளேன்.

ஆரம்பத்தில் இந்த புதிய இயல்பு நிலை எனக்கு சற்று குழப்பமாகவே இருந்தது. ஆனால், தொடர்ந்து அதனுடன் இணையும்போது அனைத்தும் சரியாகி விட்டன.

ஆரம்ப நாட்களில் நாம் அனைவருக்கும் உளவியல் ரீதியாக சற்று கடினமாகவே இருக்கும். ஆனால், அது சரியாகிவிடும்.

படப்பிடிப்பில் இருப்பவர்களைக் கண்டு நான் பயப்படுவதில்லை. நம்பிக்கையுடன் இருக்கிறேன். காரணம், அங்கு நாங்கள் மேற்கொள்ளும் உயர்தர பாதுகாப்பு நடவடிக்கைகள். இதனால் நாங்கள் அனைவரும் தைரியத்துடன் இருக்கிறோம்.

சில நாட்களுக்குப் பின்பு, படப்பிடிப்பில் கலந்துகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது. இனி அடுத்தடுத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன்' என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.