பாலிவுட் ‘பிக் பி’ அமிதாப் பச்சன் தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படங்கள் என ஆக்டிவாக இருந்துவருகிறார். அதேபோல் சமூக வலைதளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்துவருகிறார்.
மார்ச் மாதம் தொடக்கத்தில் தனது கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இந்நிலையில், நேற்று (மார்ச் 14) இரண்டாவது முறையாக கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இரண்டாவது முறையும் நன்றாகப் போய்விட்டது. இப்போது குணமடைந்துவருகிறேன். நவீன மருத்துவத்தின் தொழில்நுட்பங்கள், மருத்துவர்களின் திறமைகள் என வாழ்க்கை மாறும் அனுபவம் எனப் பதிவிட்டார்.
கண் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், தற்போது ஒய்வெடுத்துவருகிறார். விரைவில் தான் ஒப்பந்தம் செய்த நிகழ்ச்சிகள், படங்களில் பங்கேற்கவுள்ளார்.