ETV Bharat / sitara

’பிக் பி’ ஊழியர்களுக்கு கரோனா தொற்று இல்லை - அமிதாப் பச்சன்

மும்பை: நடிகர் அமிதாப் பச்சனுக்கு சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் பணிபுரியும் 26 ஊழியர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Amitabh Bachchan staff members test negative for corona

author img

By

Published : Jul 14, 2020, 12:57 PM IST

பாலிவுட் பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு சில தினங்களுக்கு முன்பாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்குச் சொந்தமான நான்கு பங்களாக்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

அமிதாப் குடும்பத்தில் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, குடும்பத்தில் இருக்கும் பிறருக்கும் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்று கூறப்பட்டது.

மேலும், அவரிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களில் 26 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க... 'பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி' - அமிதாப் பச்சன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.