ETV Bharat / sitara

’நெகட்டிவ்வாக இருப்பது நல்லது’ - கரோனாவிலிருந்து மீண்ட ஆலியா பட் - அலியாபட் லேட்டஸ் செய்திகள்

பாலிவுட் நடிகை ஆலியா பட் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Alia Bhatt
Alia Bhatt
author img

By

Published : Apr 14, 2021, 5:58 PM IST

பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி தற்போது 'கங்குபாய் கதியாவாதி' என்னும் படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

ஜூலை 30ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மார்ச் 9ஆம் தேதி சஞ்சய் லீலா பன்சாலிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் கங்குபாய் கதியாவாதி படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படக்குழுவினருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆலியா பட்டுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில், பாதுகாப்பு கருதி சில நாள்களுக்கு அவர் வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதன்பின் ஆலியாபட்டுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் வீட்டிலேயே மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஆலியா பட் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று (ஏப்.14) கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக ஆலியா பட் தனது சமூகவலைதளப்பக்கங்களில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த நேரத்தில் நெகட்டிவ்வாக இருப்பது நல்ல விஷயம்" எனப் பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.