ஹைதராபாத்: டைகர் சிந்தா ஹே, சுல்தான் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமாக அறியப்படும் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் தனது வருங்கால மனைவியை அறிமுகம் செய்துள்ளார்.
அலி அப்பாஸ் மனைவியின் பெயர் அலிசியா என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலி அப்பாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில், 1400 ஆண்டுகளுக்கு முன்பு இமாம் அலி, பாத்திமா அல் சஹ்ராவை பார்த்து சொன்னார், என் கவலைகளும் துயரங்களும் உன் முகத்தை பார்த்தபோது மறைந்துபோனது என்று... நானும் உன் முகத்தை பார்த்தபோது அப்படிதான் உணர்ந்தேன் அலிசியா. இந்த வாழ்க்கையில் நீதான் எல்லாம் என குறிப்பிட்டுள்ளார்.
அலி அப்பாஸுக்கு அவரது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று அவரது ‘தாண்டவ்’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">