கரோனா வைரஸ் காரணமாக கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை அமேசான் போன்ற ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த முறையில் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியானால் திரையரங்குகள் மூடப்படுமா என்ற அச்சம் திரையரங்கு உரிமையாளர்களிடம் எழுந்துள்ளது. சிறிய பட்ஜெட் படங்களை தொடர்ந்து தற்போது பெரிய ஹீரோக்களின் சில திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஆனால், அக்ஷய்குமார் நடித்துள்ள 'சூர்யவன்ஷி', ரன்வீர் சிங் நடித்துள்ள '83' ஆகிய படங்கள், திரையரங்குகளில்தான் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'சூர்யவன்ஷி' திரைப்படம் வரும் தீபாவளிக்கும், '83' படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி அவர்களது ரசிகர்கள் மத்தியில் மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Exciting times ahead.. Gearing up to release Rohit Shetty's Sooryavanshi on Diwali and Kabir Khan's 83 on Christmas this 2020! pic.twitter.com/JojLypeiro
— P V R C i n e m a s (@_PVRCinemas) June 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Exciting times ahead.. Gearing up to release Rohit Shetty's Sooryavanshi on Diwali and Kabir Khan's 83 on Christmas this 2020! pic.twitter.com/JojLypeiro
— P V R C i n e m a s (@_PVRCinemas) June 30, 2020Exciting times ahead.. Gearing up to release Rohit Shetty's Sooryavanshi on Diwali and Kabir Khan's 83 on Christmas this 2020! pic.twitter.com/JojLypeiro
— P V R C i n e m a s (@_PVRCinemas) June 30, 2020
இதையும் படிங்க:திரையரங்குக்கு என்றுமே அழிவில்லை - OTT பிரச்னை பற்றி கலைப்புலி தாணு கருத்து