அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஜூன் 1, 2019 முதல் ஜூன் 1, 2020 வரையிலான வருவாயை வைத்து 2020ஆம் ஆண்டில் உலகின் மிக அதிக சம்பளம் பெறும் 10 ஆண் நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் பெற்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் ஆறாவது இடத்தில் உள்ளார். 2019ஆம் ஆண்டு அக்ஷய் குமார் நான்காவது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 2 இடங்கள் பின்னோக்கி நகர்ந்து உள்ளார். இருப்பினும் இந்திய அளவில் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியப் பிரபலம் ஆவார்.
இப்பட்டியலில் இந்த ஆண்டும் ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் (தி ராக்) 87.5 மில்லியன் அமெரிக்க டாலர் உடன் முதலிடத்தை வகிக்கிறார். இவர் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக முதலிடம் வகித்து வருகிறார். இவர் 'ரெட் நோட்டீஸ்' என்னும் புதிய படத்தில் நடித்து வருவதற்காக, ஊதியமாக 23.5 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இரண்டாவதாக 'டெட்பூல்' நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் 71.5 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மூன்றாமிடத்தில் நடிகர்-தயாரிப்பாளர் மார்க் வால்பெர்க் 58 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உள்ளார். அடுத்ததாக நடிகர்கள் பென் அஃப்லெக் 55 மில்லியன் அமெரிக்க டாலர்களுடனும், வின் டீசல் 54 மில்லியன் டாலர்களுடனும் உள்ளனர். அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியல் அடுத்த மாதம் வெளிவரும்.
ஸ்ட்ரீமிங் பிளாட்பாரத்திற்காக பணிபுரிந்து வரும் அக்ஷய் குமார் தனது முதல் தொடரான ‘தி எண்ட் ஃபார்’ கதாபாத்திரத்துக்காக 10 மில்லியன் அமெரிக்க டாலரை வருமானமாக பெற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் அக்ஷய் குமார் - அக்ஷய் குமாரின் புதிய படங்கள்
மும்பை: ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை இதழ் வெளியிட்ட உலகின் மிக அதிக சம்பளம் பெறும் 10 நடிகர்களின் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் ஆறாவது இடத்தில் உள்ளார்.