பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகியோர் நடிப்பில் உருவகியுள்ள படம் 'சூர்யவன்ஷி'. த்ரில்லர் காப் ஸ்டோரியாக உருவாகியுள்ள இப்படத்தை ரோகித் ஷெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.
அதில் அக்ஷய் குமார், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன், கத்ரீனா கைஃப் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அஜய், ''நானும், அக்ஷய் குமாரும் இங்கே ஒன்றாக இருக்கிறோம். இந்த தருணத்தில் எங்கள் ரசிகர்களிடம் ஒரு விஷயத்தை சொல்ல கடமைப்பட்டுள்ளோம். தயவு செய்து எங்களுக்காக சண்டை போட்டுக்கொள்ளாதீர்கள். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம்'' என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அக்ஷய் குமார், ''நானும் அஜய் தேவ்கனும் ஒன்றாக தான் திரைத்துறைக்குள் நுழைந்தோம். எங்களது முதல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதையெல்லாம் கடந்து தான் தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளோம். உங்களின் அனைவரது ஆதரவும் இப்படத்திற்கு தேவை'' என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: வில்லனாக பாலிவுட் செல்லும் 'பிக் பாஸ்' புகழ் கணேஷ் வெங்கட்ராம்