ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்' (ரத்தம் ரணம் ரெளத்திரம்). தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராம ராஜு, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் உருவாகிவருகிறது. சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தின் டீசரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், படக்குழுவினர், கிளைமேக்ஸ் படப்பிடிப்புத் தொடங்கியதை அறிவிக்கும்விதமாக புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தனர்.
இது ரசிகர்களிடையே படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்தனர். இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்கின் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் சமீபத்தில் கைப்பற்றியது.
-
Load. Aim. Shoot.
— Ajay Devgn (@ajaydevgn) April 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you @ssrajamouli for envisioning me in such an exciting and powerful character.https://t.co/hL252PMMGR#RRR #RRRMovie@tarak9999 @AlwaysRamCharan
">Load. Aim. Shoot.
— Ajay Devgn (@ajaydevgn) April 2, 2021
Thank you @ssrajamouli for envisioning me in such an exciting and powerful character.https://t.co/hL252PMMGR#RRR #RRRMovie@tarak9999 @AlwaysRamCharanLoad. Aim. Shoot.
— Ajay Devgn (@ajaydevgn) April 2, 2021
Thank you @ssrajamouli for envisioning me in such an exciting and powerful character.https://t.co/hL252PMMGR#RRR #RRRMovie@tarak9999 @AlwaysRamCharan
இந்நிலையில், இன்று (ஏப். 3) அஜய் தேவ்கனின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் அஜய் தேவ்கன் நடிக்கும் கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆனால் இதில் அஜய் தேவ்கனின் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிடவில்லை.
இதற்கு முன்னர் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட் ஆகியோரின் கதாபாத்திர போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டது குறிப்பிடதக்கது.