ETV Bharat / sitara

உங்கள் செயல் முன்மாதிரி சோனு - அஜய் தேவ்கன் வாழ்த்து

குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் நடிகர் சோனு சூட்டின் செயலை நடிகர் அஜய் தேவ்கன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

sonu
sonu
author img

By

Published : May 27, 2020, 1:40 PM IST

இந்தியில் 'தபாங்', 'சிங் இஸ் கிங்', 'சிம்பா', தமிழில் 'சந்திரமுகி’, 'அருந்ததி', 'ஒஸ்தி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் சோனு சூட்.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் மத்தியில், மும்பையில் வேலை செய்துவந்த பிற மாநிலத் தொழிலாளர்கள் பலர், வேலையிழந்து, உணவு உறைவிடமின்றி திண்டாடி வந்த நிலையில், இவர்களைப் பார்த்து மனம் வருந்திய சோனு சூட், அண்டை மாநில அரசுகளுடன் பேசி தன் சொந்த செலவில் சிறப்பு பேருந்துகள் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.

"குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு குடும்பத்தினருடன் நெடுஞ்சாலையில் நடந்து செல்வதைப் பார்த்து, நான் ஏசி அறையில் அமர்ந்து ட்வீட் செய்ய முடியாது. இவர்களுக்கு உதவுவதுதான் எனது முக்கிய கடமை” என்று இதுகுறித்து அவர் முன்னதாக கருத்துத் தெரிவித்திருந்தார்.

  • Thank you so much bhai. Words from you give me more power and encourages me to work harder on reuniting them with their loved ones❣️Love u loads ❤️ https://t.co/QEHn4BSLPq

    — sonu sood (@SonuSood) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சோனு சூட்டின் இந்தப் பணிகள் ஏற்கனவே நாடு முழுவதும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுவந்த நிலையில், நடிகர் அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில், "குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நீங்கள் செய்யும் பணிகள் முன்மாதிரியானவை" என ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக சோனு சூட், மிக்க நன்றி பாய். உங்களிடம் இருந்து வந்த இந்த வார்த்தை, தொழிலாளர்களை அவர்களின் அன்புக்குரியவர்களுடன் சேர்ப்பத்தில் எனக்கு அதிக சக்தியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது என்று ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: 'குடிபெயர்ந்த தொழிலாளர்களை மனிதர்களாகப் பாருங்கள்' - சோனு சூட் உருக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.