நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இன்று ஹோலி கொண்டாட வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாலிவுட் பிரபலங்கள் ஹோலி பண்டிகைக்கு தயாராகும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். அந்தவரிசையில் தற்போது ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் இணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ஒரே நிற உடை அணிந்து இருவரும் ஹோலி கொண்டாடியுள்ள புகைப்படத்தை ஐஸ்வர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”அனைவருக்கும் ஹாப்பி ஹோலி. அன்பும், பிரகாசமும் நிலைக்கட்டும்’’ என்று பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கதாநாயகி டூ கதையின் நாயகி: தமிழ் சினிமாவின் ஹீரோயின்ஸ்!