பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு நேற்று (ஏப்ரல் 4) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாகவும், தன்னை சமீப காலங்களில் சந்தித்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் ட்விட்டர் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார். தற்போது மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரோனா பாதிப்புக்கு ஆளான சமயத்தில், இவர் ராம் சேது என்னும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 5) அந்தத் திரைப்படக் குழுவினர் மாத் தீவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என்பதால், அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், சுமார் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி, அக்ஷயின் மேக்கப் குழுவினருக்கும், உதவியாளர்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. எனவே, படப்பிடிப்பில் மொத்தமாக 45 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், ராம் சேது படப்பிடிப்பு காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 30ஆம் தேதியன்று, மாதுரி தீட்சித் நடுவராகப் பங்கேற்ற ரியாலிட்டி ஷோவான டான்ஸ் திவானில் சுமார் 18 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சத்குரு பதிவிட்ட கோயில் காணொலி: இதயம் நொறுங்கிய காஜல் அகர்வால்!