பாலிவுட் நடிகை அடா சர்மா ஷாக்ஸில் முகமூடி தயாரிப்பது எப்படி என்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் அடா சர்மா. பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் இயக்கத்தில் உருவான '1920' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். த்ரில்லர் படமாக உருவான இப்படத்தில் இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. அடுத்தடுத்து நடித்த படங்களில் கவர்ச்சி வேடம் ஏற்று நடித்துவந்தார். இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான 'இது நம்ம ஆளு' படத்தில் சிறிய வேடம் ஏற்று நடித்தார்.
சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த 'சார்லி சாப்ளின் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறாததால் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். படவாய்ப்புகள் குறைந்ததால் அவ்வப்போது போட்டோ சூட்டில் எடுக்கப்படும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
சில நேரங்களில் சர்ச்சையை கிளப்பும் பதில்களை கூறி சிக்கலில் மாட்டிக்கொள்வார். தற்போது கரோனா அச்சம் காரணாக தேசிய ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமலில் உள்ளது.
இதனால் வீட்டிற்குள் இருக்கும் அடா சர்மா, வீட்டிலேயே கால் உறையில் இருந்து முகமூடி தயாரிப்பது எப்படி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், தயவு செய்துயாரும் வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள். அப்படி அத்தியாவசியமாக போகவேண்டும் என்றால் மாஸ்க் அணிந்து செல்லுங்கள். இல்லையென்றால் போகவேண்டாம். அதையும் மீறி சென்றால் காவலர்கள் உங்களை விரட்டுவார்கள்.
அதனால் வீட்டிலேயே எப்படி ஷாக்ஸை வைத்து மாஸ்க் தயாரிக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம் என கூறி அதில் காண்பித்தார். நிமடத்திற்கு குறைவாக இதை செய்யலாம் என கூறியிருந்தார்.
அடா சர்மாவின் இந்த வீடியோ நெட்டிசன்களால் அதிகம் விரும்பட்டு சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சர்வதேச டேட்டிங் ஷோவில் அடா ஷர்மா! என்ன செய்கிறார் தெரியுமா?