ETV Bharat / sitara

இயக்குநர் ஆதித்யாவை மணந்த யாமி கெளதம் - திரைப்பட இயக்குநரை திருமணம் செய்துக்கொண்ட யாமி கெளதம்

மும்பை: நடிகை யாமி கெளதம் பிரபல திரைப்பட இயக்குநரை இன்று (ஜூன் 4) திருமணம் செய்து கொண்டார்.

Yami Gautam
Yami Gautam
author img

By

Published : Jun 4, 2021, 8:26 PM IST

Updated : Jun 4, 2021, 10:21 PM IST

பாலிவுட்டில் 2012ஆம் ஆண்டு வெளியான 'விக்கி டோனார்' படம் மூலம் அறிமுகமானவர் யாமி கெளதம். இதனைத் தொடர்ந்து இவர் அமிதாப் பச்சன், ஹிரித்திக் ரோஷன், அஜய் தேவ்கான் உள்ளிட்ட நடிகர்களுடன் பல படங்களிலும் நடித்துள்ளார். இவர் 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையும் அறிமுகமானார். மேலும் யாமி கெளதம் தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். யாமி கெளதம் சினிமா மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என வலம் வருகிறார்.

முன்னதாக அவர், 2019ஆம் ஆண்டு 'யூரி - தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' என்னும் படத்தில் நடித்திருந்தார். ஆதித்யா தர் இயக்கிய இந்தப் படத்தில் விக்கி கெளசல் நடித்திருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதே ஆதித்யா தர் - யாமி கெளதம் இருவருக்கும் இடையே நட்பு உருவாகி, அது பின் கதாலானது. அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மத்துடன் இன்று (ஜூன் 4) திருமணம் செய்து கொண்டனர்.

  • With the blessings of our family, we have tied the knot in an intimate wedding ceremony today.
    As we embark on the journey of love and friendship, we seek all your blessings and good wishes.

    Love,
    Yami and Aditya pic.twitter.com/W8TOpAJxja

    — Yami Gautam (@yamigautam) June 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கரோனா பரவல் காரணமாக, ஆதித்யா தர் - யாமி கெளதம் தங்களது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். தங்களது திருமணம் குறித்து ஆதித்யா தர் - யாமி கெளதம் இருவரும் சமூகவலைதளப்பக்கதில் கூறியிருப்பதாவது, "எங்கள் குடும்பத்தினரின் ஆசீர்வாதத்தோடும் நெருங்கிய நபர்கள் மட்டும் பங்குகொண்ட விழாவில் எங்கள் திருமணம் நடந்து முடிந்தது.

அன்பும், நட்பும் சேர இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கும் இந்த வேளையில் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துகளையும் கோருகிறோம் எனக் கூறியுள்ளனர். மேலும் இதனுடன் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து இவர்களது திருமணத்திற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Last Updated : Jun 4, 2021, 10:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.