ETV Bharat / sitara

டெல்லி முதலமைச்சரை சந்தித்த சோனு சூட் - தேர்தல் காரணமா? - சோனு சூட்

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை இதோடு முடிச்சுப்போட்டு சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பஞ்சாப் மாநிலமும் ஒன்று; ஆம் ஆத்மி கட்சி தங்களை வலுப்படுத்திக்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Actor Sonu Sood meets Delhi CM Arvind Kejriwal

author img

By

Published : Aug 27, 2021, 3:20 PM IST

டெல்லி: நடிகர் சோனு சூட் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். அப்போது துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா உடன் இருந்தார்.

கரோனா சூழலில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவியதன் மூலம் புகழ் வெளிச்சத்தை பெற்றவர் நடிகர் சோனு சூட். அவர் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் அவரது சேவையை பாராட்டி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலை எதற்காக சந்தித்தார் என்பது தெளிவாக தெரியவில்லை.

ஆனால், பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை இதோடு முடிச்சுப்போட்டு சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பஞ்சாப் மாநிலமும் ஒன்று; ஆம் ஆத்மி கட்சி தங்களை வலுப்படுத்திக்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

டெல்லி முதலமைச்சரை சந்தித்த சோனு சூட்

சோனு சூட்டின் சேவை மனப்பான்மை டெல்லி முதலமைச்சரை மிகவும் கவர்ந்ததாக தெரிகிறது. கரோனா இரண்டாம் அலையின் போது சிபிஎஸ்சி தேர்வை நடத்த மத்திய அரசாங்கம் முடிவு செய்தது. அப்போது தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவாலும், சோனு சூட்டும் முதலில் குரல் கொடுத்தனர். அதன்பிறகு மத்திய அரசும் தேர்வு நடத்தும் முடிவை கைவிட்டது. இதற்காக இவர்கள் இருவரும் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசியலுக்கு தயாராகவில்லை - சோனுசூட் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேகப் பேட்டி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.