ETV Bharat / sitara

பிக் பியின் பிறந்தநாள்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - அமிதாப் பச்சனின் படங்கள்

பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

amitabh bachchan
amitabh bachchan
author img

By

Published : Oct 11, 2021, 10:21 AM IST

'பாலிவுட்டின் பிக் பி' அமிதாப் பச்சன் இன்று (அக். 11) தனது 79ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். அவர் 80-களில் முன்னணி நடிகராக வலம் வந்தபோது, அவர் நடிப்பில் வெளியான 'ஷோலே', 'டான்', 'திவார்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இவரது நடிப்பில் இந்தியில் வெளியான பல படங்கள் தமிழில் ரீமேக்செய்யப்பட்டன. உச்ச நட்சத்திரமான அமிதாப், திரையுலகில் கதாநாயகனாக மட்டுமல்லாது, ஒரு கட்டத்திற்கு மேல் குணசித்திர நடிகராகவும் நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றுவந்தார்.

'கபி குஷி கபி கம்', 'பிக்கு', 'பிங்க்' உள்ளிட்ட படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார்.

மேலும் விளம்பரப் படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது போன்றவற்றிலும் அமிதாப் பச்சன் நடித்துவருகிறார். இன்று பிறந்தநாளைக் கொண்டாடிவரும் அமிதாப்பச்சனுக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர்கள் மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன்பு கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: தந்தை புத்தகத்துக்கு எழுந்த விமர்சனங்களை நினைவுபடுத்திய அமிதாப்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.