ETV Bharat / sitara

ஷாருக்கான் தயாரிப்பில் ஜூனியர் பச்சன் நடிக்கும் 'போப் பிஸ்வாஸ்' - ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மெண்ட்

ஷாருக்கான் தயாரிப்பில் அபிஷேக் பச்சன் நடிக்கும் 'போப் பிஸ்வாஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் இன்று தொடங்கியது.

AbhishekBachchan
AbhishekBachchan
author img

By

Published : Jan 24, 2020, 1:25 PM IST

'லுடோ', 'பா 2' படங்களைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அறிமுக இயக்குநர் தியா அன்னபூர்ணா கோஷ் இயக்கும் 'போப் பிஸ்வாஸ்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'கஹானி' படத்தின் இயக்குநர் சுஜோய் கோஷின் மகளான தியா அன்னபூர்ணா கோஷ், இந்தப் படத்தை 'கஹானி' படத்தில் இடம்பெற்ற போப் பிஸ்வாஸ் என்ற கதாபாத்திரத்தைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்.

வித்யா பாலன், பரம்பரதா சாட்டர்ஜி, நவாசுதீன் சித்திக், சஸ்வதா சாட்டர்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியாகி 'கஹானி' படம் வசூல் சாதனைப் படைத்தது. அதில் இடம்பெற்ற சஸ்வதா சாட்டர்ஜியின் போப் பிஸ்வாஸ் என்ற கதாபாத்திரம் அந்தப் படத்தில் மிகவும் பேசப்பட்ட ஒன்றாகும்.

AbhishekBachchan
அபிஷேக் பச்சன் - ஷாருக்கான்

தற்போது கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் 'போப் பிஸ்வாஸ்' படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், பவுண்ட் ஸ்கிரிப்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் இன்று கொல்கத்தாவில் தொங்கியுள்ளது. இதில் அபிஷேக் பச்சனின் கதாபாத்திரம் மிகவும் சென்ஸிட்டிவான கதாபாத்திரம் என்பதால் இதற்காக அவர் தன்னை முழுமையாகத் தயார்படுத்தியிருப்பதாகப் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக அபிஷேக் பச்சன் நடிப்பில் 2018ஆம் ஆண்டு 'மேன்மர்ஸியான்' படம் வெளியாகியிருந்தது.

இதையும் படிங்க...

TRPயில் விஜய்யின் 'பிகில்' படத்தை பின்னுக்குத் தள்ளிய 'விஸ்வாசம்' - உற்சாகத்தில் தல ரசிகர்கள்

Intro:Body:

Filming begins... #SRK's new production - starring #AbhishekBachchan and #ChitrangdaSingh - commences shooting today... The crime thriller is titled #BobBiswas... Directed by Diya Annapurna Ghosh... Produced by Gauri Khan, Sujoy Ghosh and Gaurav Verma.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.