ஆமிர்கான் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகிவரும் படம் 'லால் சிங் சத்தா'. ஹாலிவுட்டில் 1994ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ஃபாரஸ் கம்ப் படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் கரீனா கபூர், விஜய்சேதுபதி, மோனா சிங், பங்கஜ் திரிபாதி, மானவ் கோலி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆமிர்கான் நடிப்பில் 2018ஆம் ஆண்டு தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படம் வெளியாகியிருந்தது. இந்தப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆமிர்கான் நடிப்பில் 'லால் சிங் சத்தா' படம் வெளியாகவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் ஏறக்குறைய இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பஞ்சாப், மும்பை, தமிழ்நாடு, கேரளா, கோவா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதன் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்றன.
ஆமிர்கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் வையகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை பிரபல இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்குகிறார். இந்தப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதேபோல் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகிவரும் 'பச்சன் பாண்டே' படமும் அதே நாளில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது ஆமிர்கான் கேட்டுக்கொண்டதை அடுத்து இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி அக்ஷய் குமாரின் 'பச்சன் பாண்டே' 2021 ஜனவரி 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தப்படம் வெளியாக இன்னும் ஓராண்டு உள்ளது.
-
Sometimes all it takes is one conversation. Thank you to my friends @akshaykumar & Sajid Nadiadwala for their warm gesture of moving the release date of their film Bachchan Pandey at my request. I wish them the very best for their film. Looking forward to it.
— Aamir Khan (@aamir_khan) January 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Love.
a
">Sometimes all it takes is one conversation. Thank you to my friends @akshaykumar & Sajid Nadiadwala for their warm gesture of moving the release date of their film Bachchan Pandey at my request. I wish them the very best for their film. Looking forward to it.
— Aamir Khan (@aamir_khan) January 27, 2020
Love.
aSometimes all it takes is one conversation. Thank you to my friends @akshaykumar & Sajid Nadiadwala for their warm gesture of moving the release date of their film Bachchan Pandey at my request. I wish them the very best for their film. Looking forward to it.
— Aamir Khan (@aamir_khan) January 27, 2020
Love.
a
ஆமிர்கானின் கோரிக்கையை ஏற்று பட வெளியீட்டை தள்ளிவைத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்து ஆமிர்கான் ட்வீட்டும் செய்துள்ளார். அதில், 'அருமை நண்பர் அக்ஷய் குமாருக்கு நன்றி. உங்களது படத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அதனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.