ETV Bharat / sitara

'ஷிகாரா' படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த அமீர் கான் - விது வினோத் சோப்ரா

காஷ்மீரில் நடக்கும் அரசியல், வன்முறை, பயங்கரவாதம் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள விது வினோத் சோப்ராவின் 'ஷிகாரா' திரைப்படக்குழுவுக்கு நடிகர் அமீர் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Shikara
Shikara
author img

By

Published : Feb 8, 2020, 12:29 PM IST

காஷ்மீரில் நடக்கும் அரசியல், பயங்கரவாதம், சீர்குலைந்த குடும்பங்கள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் 'ஷிகாரா தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் காஷ்மீரி பண்டிட்ஸ்'.

பாலிவுட் இயக்குநர் விது வினோத் சோப்ரா 13 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கும் இந்தப்படம் 1989இல் காஷ்மீரில் நடந்த இன அழிப்பு, கலவரம், சமீபத்தில் காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளித்துவந்த சட்டப்பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட பல பிரச்னைகளைப் பேசும் படமாக அமைந்துள்ளது.

ஆதில் கான், சதியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை வினோத் சோப்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பாடல்களுக்கு சந்தோஷ் சந்தில்யா, அபய் சோபோரி இசையமைத்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசையமைத்துள்ளார்.

இந்தப்படம் நேற்று வெளியான நிலையில், பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. அந்த வகையில், பாலிவுட் நடிகர் அமீர் கான் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 'உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த வாழ்த்துக்கள் வினோத்! ஷிகாரா நமது சமீபத்திய வரலாற்றில் மிகவும் சோகமான சம்பவங்களில் ஒன்றாகும். சொல்ல வேண்டிய கதை இது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Wishing you all the very best Vinod!
    Shikara is a film about one of the most tragic events in our recent history. A story that needs to be told. https://t.co/IjssVfrwus

    — Aamir Khan (@aamir_khan) February 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க...

ஜான்வி கண்முன்னே விபத்திலிருந்து உயிர் தப்பிய போட்டோகிராபர்

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/cinema/aamir-khan-sends-best-wishes-to-shikara-director-vidhu-vinod-chopra/na20200207180451079

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.