ETV Bharat / sitara

'என்னுடைய ஊழியர்களில் சிலருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது' - ஆமீர் கான் - கரோனா நோய்தொற்று

மும்பை: தனது வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

ஆமிர்கான்
ஆமிர்கான்
author img

By

Published : Jun 30, 2020, 5:06 PM IST

கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இதனால் திரைப் பிரபலங்கள் பலர் தங்களது வீட்டிலேயே இருக்கின்றனர். இதற்கிடையே பாலிவுட் நடிகர் ஆமீர் கான் வீட்டில் பணிபுரியும் சில ஊழியர்களுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆமீர் கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னுடைய ஊழியர்களில் சிலருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்பை மாநகராட்சி அலுவலர்கள் மிகவும் விரைவாகவும் திறமையாகவும் செயல்பட்டு அவர்களை மருத்துவ முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்வதற்காகவும், ஒட்டுமொத்த சமூகத்தைத் தூய்மைப்படுத்தவும் மும்பை மாநகராட்சி அலுவலர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் உள்பட எஞ்சிய அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எங்களுக்குக் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. இப்போது என் அம்மாவுக்குப் பரிசோதனை. அவருக்குத் தொற்று இருக்கக் கூடாது என்று தயவுசெய்து பிரார்த்தனை செய்யவும். எங்களுக்கு விரைவாகவும் அக்கறையுடனும் உதவிய மும்பை மாநகராட்சிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூற விரும்புகிறேன்.

கோகிலாபென் மருத்துவமனைக்கும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. பரிசோதனையின்போது மிகவும் கனிவுடன் நடந்துகொண்டனர். கடவுள் ஆசீர்வதிக்கட்டும், பாதுகாப்பாக இருப்போம்" என்று கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.