சான்ஃபிரான்சிஸ்கோ: ஷார்ட்ஸ் மானிடைசேஷன் மாட்யூல் (Shorts Monetization Module) உள்ளிட்ட புதிய மாட்யூல்களை சேர்ப்பதற்காக யூடியூப் பார்ட்னர் புரோகிராம் (YPP) விதிமுறைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஷார்ட்ஸ் மானிடைசேஷன் மாட்யூல், கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு யூடியூப் ஷார்ட்களில் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த திட்டம் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு இந்த விளம்பர ஆப்ஷனை கிரியேட்டர்கள் பயன்படுத்தலாம்.
அதுமட்டுமல்லாமல் வாட்ச் பேஜ் மானிடைசேஷன் மாட்யூல் (Watch Page Monetisation Module), காமர்ஸ் புரோடக்ட் ஆடெண்டம் (Commerce Product Addendum) ஆகிய வருவாய் ஈட்டும் வாய்ப்புகளும் யூடியூபில் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன் மூலம், வாட்ச் பேஜில் பார்க்கப்படும் நீண்ட அல்லது லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோக்களில் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டலாம்.
அதேபோல் பார்வையாளர்களிடமிருந்து நன்கொடை பெறுவதற்கு, காமர்ஸ் புரோடக்ட் ஆடெண்டம் மாட்யூல் பயன்படும். இந்த புதிய மாட்யூல்கள் மூலம் பயன்பெற வேண்டுமெனில், கன்டென்ட் கிரியேட்டர்கள் அனைவரும் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் அப்டேட் செய்யப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும், அதேபோல் இந்த புரோகிராமில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:WhatsApp-ல் "ரிப்போர்ட் ஸ்டேட்டஸ்" வசதி - விரைவில் அறிமுகம்!