ETV Bharat / science-and-technology

உலகில் முதன்முதலாக குரங்கு மூளையின் 3டி படம் - குரங்கு மூளையின் 3டி படம்

உலகிலேயே முதன்முதலாக மக்காக் வகை குரங்குகளின் மூளையின் 3டி படத்தை சைனீஷ் அகாடமி ஆஃப் சயின்சஸின் (Chinese Academy of Sciences) ஒரு குழு எடுத்துள்ளது.

குரங்கு மூளை
குரங்கு மூளை
author img

By

Published : Aug 4, 2021, 2:52 PM IST

மூளைதான் நம் உடலின் அனைத்து பாகங்களும் செயல்படுவதில் அளப்பரிய பங்காற்றுகிறது. மூளையில் இருந்து பெறப்படும் சிக்னல் தான் உறுப்புகளை வேலை செய்ய வைக்கிறது.

இதற்காக மூளையில் ஏராளமான நரம்புகள் செயல்படுகின்றன. இந்த நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு தான் இந்த பர்கின்சன் நோய்.

முன்னரே அறியும்பட்சத்தில் இந்நோயை ஓரளவுக்கு குறைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பர்கின்சன் நோய் டோபமைன் என்ற பொருளை உருவாக்கும் மூளையின் செல்களைப் பாதிக்கிறது.

மூளை ஆய்வு

இந்நிலையில் பெய்ஜிங்கில் உள்ள சைனீஷ் அகாடமி ஆஃப் சயின்சஸின் ஒரு குழு, மனித மூளை குறித்து அறிந்து கொள்ள, மக்காக் குரங்குகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தியது.

உலகிலேயே இதுவரை இல்லாத தெளிவுத்திறன் (The world's first high-resolution 3D image ) கொண்ட முப்பரிமாண (3-டி) தொழில் நுட்பம் மூலம் குரங்கின் மூளையைப் படம் எடுத்தது. இதற்காக ஃப்ளோரசன்ட் இமேஜிங் நுட்பங்களைப் பயன்படுத்தியது.

இந்தக் குழு குரங்கின் மூளையைப் படமெடுக்க பிரத்யேகமாக வாலியுமெட்ரிக் இமேஜிங் வித் சிங்க்ரோனஸ் ஆன்-தி-ஃப்ளை-ஸ்கேன் மற்றும் ரீட்அவுட் ( Volumetric Imaging with Synchronous on-the-fly-scan and Readout) என்ற புதிய முறையை உருவாக்கியது. இதன் மூலமாக 10 வயதான மூன்று மக்காக் வகை குரங்குகள் சோதிக்கப்பட்டன.

மனிதனும், குரங்கும்!

மனித மூளை நுட்பமான, மிக சிக்கலான இணைப்புகளைக் கொண்ட சுமார் நூறு பில்லியன் நரம்பு செல்களைக் கொண்டுள்ளது. மக்காக் குரங்குகள் மனிதர்களுடன் ஒப்பிடுவதற்கு ஏற்றவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வில் கிடைத்த 3டி படம் மூளையைப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவும் என ஆய்வாளர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: இன்று பூமிக்கு மிக அருகே வரும் ’சனி’ கோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.