ETV Bharat / science-and-technology

50, 60 எல்லாம் இல்ல... நூறுதான்! ஃபோன் கேமராவில் சதம் விளாசிய மீ - மீ டிவி 5 ப்ரோ அம்சங்கள்

Mi Note 10 Event : சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தகவல் சாதனங்களை இன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

Mi Note 10 Event
author img

By

Published : Nov 6, 2019, 10:37 AM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

'சீனாவின் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் 'சியோமி'யின் தகவல் சாதனங்கள் உலகளவில் பரவலாகப் பயனர்களின் நல்லாதரவை பெற்று விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. ஒரு வருடத்திற்கு ஒன்று, ஆறு மாதத்திற்கு ஒன்று, மூன்று மாதத்திற்கு ஒன்று என்று புதிய கைப்பேசி வரவுகள் வெளிவந்த காலத்தை மாற்றியமைத்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. ஆம், புதுப்புது பரிணாம தொழில்நுட்பங்களுடன் சந்தையில் அடுத்தடுத்து தனது தகவல் சாதனங்களை வெளியிட்டுவருகிறது.

இந்த நேரத்தில் மொபைல்போன் சந்தையில் முதன் முறையாக 147 மெகாபிக்சல்கள் கொண்ட ஐந்து (Penta Camera) பின்பக்கப் படக்கருவியுடன் குறைந்த விலையில் மி 10 ப்ரோ (Mi Note 10) தகவல் சாதன சந்தையில் இன்று காலடி எடுத்து வைக்கவிருக்கிறது. இது மட்டுமில்லாமல், மீ வாட்ச் (Mi Watch), மீ டிவி 5 ப்ரோ (Mi Tv 5 Pro) ஆகிய தகவல் சாதனங்களும் இன்று ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெறவுள்ள மி நிகழ்வில் (Mi Event) வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு இந்த நிகழ்வு யூ ட்யூப், சமூக வலைதளங்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

இன்று வெளிவரவிருக்கும் தகவல் சாதனங்கள் குறித்து சிறிய கண்ணோட்டத்தைக் காணலாம்.

Mi Note 10 Event, 108 Megapixel Camera Set to Launch, Mi Watch, Mi tv 5 Pro, மீ நோட் 10 அம்சங்கள், Mi Note 10 Specifications, மீ வாட்ச் அம்சங்கள், Mi Watch Specifications, மீ டிவி 5 ப்ரோ அம்சங்கள், Mi tv 5 Pro Specifications
மீ நோட் 10 (Mi Note 10)

மீ நோட் 10 சிறப்பம்சங்கள் (Mi Note 10 Specifications):

  • நிறங்கள் (Colour): பச்சை (Aurora Green), வெள்ளை (Glacier White), கறுப்பு (Midnight Black)
  • சேமிப்பு (Storage): 64 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி / 6 ஜிபி ரேம், 256 ஜிபி / 8 ஜிபி ரேம்
  • அளவு: 157.8 x 74.2 x 9.7 மிமீ (6.21 x 2.92 x 0.38 in)
  • திரை (Display): 6.47 அங்குல சூப்பர் அமோலெட் தொடுதிரை, 1.6 கோடி நுட்ப வண்ணங்கள் (6.47 inches, Super AMOLED capacitive touchscreen, 16M colors)
  • காட்சித் தரம் (Display Quality): 1080 x 2340 பிக்சல்கள், 19.5: 9 விகிதம், ~ 398 பிபிஐ அடர்த்தி (1080 x 2340 pixels, 19.5:9 ratio, ~398 ppi density)
  • வன்பொருள் (Hardware): குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 / 730 ஜி (8 என்.எம் சிறிய அளவு சிப்செட்) / ஆக்டா கோர் (2x2.2 GHz கிரையோ 470 தங்கம் & 6x1.8 GHz கிரையோ 470 வெள்ளி) / அட்ரினோ 618 (Qualcomm SDM730 Snapdragon 730G (8 nm) / octa-core (2x2.2 GHz Kryo 470 Gold & 6x1.8 GHz Kryo 470 Silver / Adreno 618)
  • பின்பக்க படக்கருவி (Primary Camera): ஐந்து 108 மெகா பிக்சல் (f/1.7 அப்ரச்சர்) நிலையான ஒளிப்பட வசதி- ஓஐஎஸ் (optical image stabilization- OIS), 5 மெகா பிக்சல் டெலிஃபோடோ (f/2.0 அப்ரச்சர்) ஓஐஎஸ், 12 மெகா பிக்சல் டெலிஃபோடோ (f/2.0 அப்ரச்சர்),
  • 20 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் (f/2.2 அப்ரச்சர்), 2 மெகா பிக்சல் மேக்ரோ (f/2.4 அப்ரச்சர்)
  • முன்பக்க படக்கருவி (Secondary Camera): 32 எம்பி ட்ரு டெப்த் (f/2.0 அப்பெர்சர்)
  • இட அமைப்பு (Location): ஜி.பி.எஸ்./ஜி.என்.என்.எஸ். (GPS/GNSS), டிஜிட்டல் காம்பஸ் (Digital Compass), வைஃபை, கலிலியோ (GALILEO), பிடிஎஸ் (BDS)
  • உணரிகள் (Sensors): தொடுதிரை கைரேகை பாதுகாப்பு வசதி, ஃபேஸ் ஐடி, பேரோமீட்டர் எனப்படும் காற்றழுத்தமானி, 3 அக்சிஸ் கைரோ, அக்செலெரோமீட்டர், ப்ரொசிமிட்டி, ஆம்பியென்ட் லைட், என்.எஃப்.சி (NFC)
  • இயங்குதளம் (Operating System): ஆண்ட்ராய்டு பை 9.0 (Android 9.0 (Pie) எம்ஐயுஐ11 உடன் (MIUI 11)
  • மின்கலத் திறன் (Battery): 5260 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் திறன் (Li-Po 5260 mAh battery)
  • சார்ஜ்: 30W மூலம் 58% சார்ஜ் வெறும் 30 நிமிடத்தில்
  • விலை: ரூ. 35,000 முதல் (எதிர்பார்க்கப்படுகிறது)
  • எடை: 208 கிராம்

மீ வாட்ச்
இன்று வெளியாகும் என்று நம்பப்படும் மீ வாட்ச் 3டி கிளாஸ் தோற்றத்தில் ஆப்பிள் வாட்ச் போல் இருப்பதால் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீ வாட்ச் சிறப்பம்சங்கள் (Mi Watch Specifications)

  • 1.78 அங்குல ஓலெட் தொடுதிரை 326 திரை அடர்த்தியுடன் (1.78 inch OLED Screen with 326ppi)
  • கறுப்பு, சில்வர் ஆகிய நிறங்கள்
  • ஜிபிஎஸ், என்எஃப்சி (NFC), வைஃபை ஆகிய தொடர்புகள்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 எஸ்ஓசி கொண்ட வன்பொருள் (Qualcomm Snapdragon Wear 3100 SoC )
  • எம்ஐயுஐ ஸ்மார்ட் கடிகார இயங்குதளம் (MIUI Watch Wear OS)
  • 570 எம்ஏஎச் மின்கல சேமிப்புத் திறன் (570mAh Battery)
  • அழைப்புகளுக்கு ஒலிவாங்கி, ஒலிபெருக்கி ஆதரவு
  • இ-சிம் வசதி

மீ டிவி 5 - 5 ப்ரோ

சியோமி நிறுவனம் சீனாவில் புதிய சியோமி மீ டிவி 5 ப்ரோ (Mi TV 5 Pro), சியோமி மீ டிவி 5 (Mi TV 5) ஆகிய தொலைக்காட்சி பெட்டிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிகள் அனைத்தும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிவிக்கள் சர்வதேச சந்தைக்கு இன்று அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மி டிவி 5 - 5 ப்ரோ சிறப்பம்சங்கள் (Mi tv 5 Pro Specifications)

மீ டிவி 5 - 5 ப்ரோ சிறப்பம்சங்கள் (Mi tv 5 Pro Specifications)

  • 55”, 65”, 75” ஆகிய மூன்று ரகங்கள்
  • குவாண்டம் டாட் 4கே ஓஎல்இடி திரை (மி டிவி 5 ப்ரோவில் மட்டும் )
  • மீ 4 டிவியை விட சிறிய அளவு பட்டைகள் (Small bezel compared to Mi 4 Tv)
  • 4 ஜிபி ரேம் / 64ஜிபி சேமிப்பு (மி டிவி 5 ப்ரோ) | 3 ஜிபி ரேம் / 32ஜிபி சேமிப்பு (மீ டிவி 5)
  • 1.9ஜிகாஹெர்ட்ஸ் அம்லோஜிக் குவாட்-கோருடன், மாலி-ஜி 31 வன்பொருள் உள்ளடக்கம்
  • 2 x 8வாட்ஸ் ஸ்டீரியோ ஒலிப்பெருக்கிகள் (டால்பி அட்மோஸ், டிடிஎஸ் சரவுண்ட் ஆதரவுடன்)
  • வைஃபை, புளூடூத், மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் ஆதரவு

விலை:

  1. 55 அங்குல சியோமி மீ டிவி 5 ப்ரோ ரகத்தின் விலை ரூ.37,350*
  2. 65 அங்குல சியோமி மீ டிவி 5 ப்ரோ ரகத்தின் விலை ரூ.50,450*
  3. 75 அங்குல சியோமி மீ டிவி 5 ப்ரோ ரகத்தின் விலை ரூ.1,00,900*

(* உத்தேச விலை)

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.