டெல்லி: சமூக வலைதளங்களில் முடிசூடா மன்னனாக திகழும், எலான் மஸ்க் தலைமையிலான ட்விட்டர் நிறுவனம், தவறாக வழிநடத்தும் மீடியாக்களை, மக்கள் எளிதாக அடையாளம் காணும் பொருட்டு, “நோட்ஸ் ஆன் மீடியா” எனும் புதிய வசதியை, சோதனை செய்து வருவதாக தெரிவித்து உள்ளது.
மீடியாவிற்கான சமூகக் குறிப்புகளை, ட்விட்டர் நிறுவனம் பரிசோதித்து வரும் நிலையில், இது குறிப்பிட்ட வகையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்புகள் தொடர்பான மதிப்புமிக்க செயற்கை நுண்ணறிவுகளை வழங்க, அந்த தளத்தின் கூட்டத்தை அடிப்படையாகக் கொண்ட உண்மைச் சரிபார்ப்புகளை பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போட்டோக்கள் முதல், திருத்தி அமைக்கப்பட்ட வீடியோக்கள் வரை, தவறாக வழிநடத்தும் மீடியாக்களில் அதிகம் காணப்படுகின்றன. பங்களிப்பாளர்களின் கைகளில், சூப்பர் பவரை கொடுக்கவல்ல “நோட்ஸ் ஆன் மீடியா” எனும் புது அம்சத்தை, ட்விட்டர், சோதனை செய்து வருகிறது. "ஒரு படத்துடன் இணைக்கப்பட்டு உள்ள குறிப்புகள், அதன் சமீபத்திய மற்றும் எதிர்கால பொருந்தும் படங்களில் தானாகவே தோன்றும் வகையில் இருக்கும்" என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ட்விட்டர் பயனர்கள், இனி சில ட்விட் பதிவுகளில், தங்கள் குறிப்புகளுடன் "About the image" எனும் புதிய விருப்பப் பகுதியும் இடம்பெறும். இந்த விருப்பத்தை, நாம் தெரிவு செய்யும்பட்சத்தில், அந்த மீடியா, தன்னை தவறாக வழிநடத்த வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் என்று, அந்த ட்விட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
From AI-generated images to manipulated videos, it’s common to come across misleading media. Today we’re piloting a feature that puts a superpower into contributors’ hands: Notes on Media
— Community Notes (@CommunityNotes) May 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Notes attached to an image will automatically appear on recent & future matching images. pic.twitter.com/89mxYU2Kir
">From AI-generated images to manipulated videos, it’s common to come across misleading media. Today we’re piloting a feature that puts a superpower into contributors’ hands: Notes on Media
— Community Notes (@CommunityNotes) May 30, 2023
Notes attached to an image will automatically appear on recent & future matching images. pic.twitter.com/89mxYU2KirFrom AI-generated images to manipulated videos, it’s common to come across misleading media. Today we’re piloting a feature that puts a superpower into contributors’ hands: Notes on Media
— Community Notes (@CommunityNotes) May 30, 2023
Notes attached to an image will automatically appear on recent & future matching images. pic.twitter.com/89mxYU2Kir
குறிப்பிட்ட மீடியா தொடர்பான ட்விட் பதிவை பதிவிட்டவர்கள், "About the image" எனும் விபரக்குறிப்பை பயன்படுத்தி இருந்தால், அது அதனை படிப்பவர்களுக்கும், மதிப்பீடு செய்பவர்களுக்கும் வித்தியாசமாக தெரிவதற்கு வாய்ப்பு இருப்பதாக, மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்மூலம், நாம், அதை, அந்த மீடியாவிற்கான மதிப்பீடாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அந்த ட்விட் பதிவு குறித்து ஆராயக் கூடாது.
தற்போதைய நிலையில், இந்த வசதி, ஒரே ஒரு படம் உள்ள ட்விட்களில் மட்டுமே, சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், வருங்காலங்களில், இந்த வசதியை, வீடியோக்கள் மற்றும், பல படங்கள் அல்லது வீடியோக்கள் உள்ள ட்விட்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் தொடர்பான பொருத்தத்தை துல்லியமாக மேற்கொள்ள, இன்னும் சில காலம் ஆகலாம் என்பதை, ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டு உள்ளது.
“உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் ஒவ்வொரு படத்துடனும் இது பொருந்துவதற்கு அதிக வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து உள்ள ட்விட்டர், பிழை கொண்ட படம் தொடர்பான பொருத்தங்களைத் தவிர்க்கும் அதே வேளையில், கவரேஜை விரிவுபடுத்தும் வகையில் இதை மாற்றி அமைக்க" உள்ளதாக, குறிப்பிட்டு உள்ளது.
இதையும் படிங்க: "நேவிகேஷன் தான் இனி டாப்" - இஸ்ரோ விஞ்ஞானியின் சூப்பர் தகவல்