பிரபலமான சாம்சங் நிறுவனம் தனது அடுத்த கண்டுபிடிப்பாக கேலக்ஸி ஆக்டிவ் 2 4ஜி ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்ச் மூன்று நிறங்களில் வெளியாகவுள்ள நிலையில், விற்பனை விலையாக ரூ.28 ஆயிரத்து 490 ரூபாய் நிர்ணயித்துள்ளனர்.
இந்த வாட்ச் வரும் ஜூலை 11ஆம் தேதி கடைகளிலும், ஆன்லைன் தளங்களிலும் விற்பனைக்கு வருகிறது. இதுகுறித்து பேசிய சாம்சங் இந்தியாவின் மொபைல் வர்த்தக மூத்த துணைத் தலைவர் மொஹன்தீப் சிங், "கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4 ஜிஇன் அலுமினிய பதிப்பு தான் எங்களது மிகவும் மலிவான 4ஜி வாட்ச் ஆகும்.
-
We have something exciting for you to strap on! Presenting #GalaxyWatchActive2 4G Aluminium edition, our most affordable 4G watch, with eSIM connectivity. It's also our first #MadeInIndia smartwatch #SamsungMakeForIndia @makeinindia 🇮🇳 https://t.co/0UUlzJzY52
— SamsungNewsroomIN (@SamsungNewsIN) July 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We have something exciting for you to strap on! Presenting #GalaxyWatchActive2 4G Aluminium edition, our most affordable 4G watch, with eSIM connectivity. It's also our first #MadeInIndia smartwatch #SamsungMakeForIndia @makeinindia 🇮🇳 https://t.co/0UUlzJzY52
— SamsungNewsroomIN (@SamsungNewsIN) July 9, 2020We have something exciting for you to strap on! Presenting #GalaxyWatchActive2 4G Aluminium edition, our most affordable 4G watch, with eSIM connectivity. It's also our first #MadeInIndia smartwatch #SamsungMakeForIndia @makeinindia 🇮🇳 https://t.co/0UUlzJzY52
— SamsungNewsroomIN (@SamsungNewsIN) July 9, 2020
'மேக் ஃபார் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி உட்பட 18 ஸ்மார்ட்வாட்ச்களையும் தயாரிக்கத் தொடங்கியுள்ளோம் "என்று தெரிவித்தார்.
கேலக்ஸி ஆக்டிவ் 2 4ஜி ஸ்மார்ட் வாட்ச் சிறப்பு அம்சங்கள்:
- கிளவுட் சில்வர், அக்வா பிளாக்,பிங்க் கோல்ட் என மூன்று நிறத்தில் வெளியாகிறது.
- சூப்பர் AMOLED டிஸ்ப்ளே திரை.
- வெவ்வேறு டிசைன்களில் வாட்ச் ஸ்டிராப்.
- கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி 39 ஒர்க்அவுட் டிராக்கர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஏர்டெல், ஜியோ சிம் இணைப்புகளை ஸ்மார்ட் வாட்ச் ஆதரிக்கும் வசதி உள்ளது.
- பயனர்களுக்கு ஜூலை 31 வரை 10 சதவீத கேஷ்பேக் மற்றும் ஆறு மாதம் எந்த கட்டணமும் இல்லாத இஎம்ஐ சலுகைகளைப் பெற முடியும்.
இந்த ஸ்மார்ட் வாட்ச் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.