சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் நெவாடாவில் டெஸ்லாவின் மின்சார செமி டிரக்குகளை அதன் தலைமை நிர்வாக அலுவலர் எலான் மஸ்க் இன்று (டிசம்பர் 2) அறிமுகப்படுத்தினார். இந்த செமி டிரக்குகள் டீசல் டிரக்குகளைவிட 500 மைல்கள் கூடுதலாக செல்லும் வகையில் உருவாக்கப்பட்டவை.
மிகக் கடுமையான காலநிலைகளிலும் நீடித்து உழைக்ககூடிய வகையில் வடிக்கவமைக்கப்பட்டுள்ளன. அதோடு அதிநவீன ட்ரை-மோட்டார் சிஸ்டம் & கார்பன்-ஸ்லீவ் ரோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல டிரக்கின் உள்கட்டமைப்பு, இருக்கை வசதிகள் பிரீமியமாக கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 15 அங்குல 2 தொடுதிரைகள் (இன்போ டைமண்ட் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் பேனல்), வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
டெஸ்லா செமி டிரக்கின் உற்பத்தி குறித்து 2017ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. மிகப்பெரும் டிரான்போர்ட் நிறுவனங்களுக்கு செமி டிரக் உருவாக்கி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கரோனா தொற்று காரணமாக உதிரிபாகங்கள் பற்றாக்குறை ஏற்படவே உற்பத்தி ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செமி டிரக்கை முன்பதிவு செய்ய ரூ. 16 லட்சம் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் 69 கோடி பேர் 5ஜி சேவையை பயன்படுத்துவார்கள் - ரிப்போர்ட்