ஃபைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தின் அவசரப் பயன்பாட்டிற்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 80 வயதை கடந்தவர்களுக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியருக்கும் தடுப்பு மருந்து வழங்கும் பணி தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், கரோனா தடுப்பு மருந்து எங்கெல்லாம் வழங்கப்படுகிறது என்ற தகவல்களை மக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் புதியதொரு வசதியை கூகுள் பிரிட்டனில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கரோனா குறித்து போலி செய்திகளைக் களையவும் உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்கும் வகையிலும் கூகுள் கடந்த மார்ச் மாதம் இந்த முன்னெடுப்பை தொடங்கியது.
இதன்மூலம் கரோனா தொடர்பான தகவல்களை மக்கள் தேடும்போது, அவர்களுக்கு ஆராய்ச்சியாளர்களால் உறுதிசெய்யப்பட்ட தகவல்களே கிடைக்கும்.
யூ-ட்யூப் தளத்திலும் கரோனா குறித்த தகவல்களைத் தேடினால், முதலில் அங்கீகரிக்கப்பட்ட தகவல்களே பயனாளர்களுக்கு வழங்கப்படும். மேலும், கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தப் போரில் உலக சுகாதார அமைப்புக்கு உதவும் வகையில் சுமார் 15 மில்லியன் டாலர் (ரூ.110 கோடி) நிதியுதவி அளித்துள்ளது.
கரோனா பரவ தொடங்கியதிலிருந்து உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இதுவரை 250 மில்லியன் டாலரை (ரூ.18 ஆயிரம் கோடி) வாங்கியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.75,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி இலக்கு: வால்மார்ட் அறிவிப்பு