பின்லாந்தின் ஹெல்சின்கியில் உள்ள எலிசா தொழில்நுட்ப நிறுவனத்தின் முதன்மை ஸ்டோரில் 5ஜி சர்வீஸில் அதிவேக இணையதள வேகத்தை அளித்திட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்காக எலிசாவின் 5ஜி நெட்வொர்க், நோக்கியாவின் 5ஜி எம்எம்வேவ் தொழில்நுட்பம் மற்றும் குவால்காம் டெக்னாலஜிஸின் 5ஜி ஸ்மார்ட்போன் சோதனை சாதனங்களை ஒன்றிணைந்து வடிவமைத்துள்ளனர்.
இந்தப் புதிய 5ஜி வேகம் மூலமாக 4K வீடியோக்கள் அல்லது பெரிய கேம்ஸ்களை எளிதாக பதிவிறக்கம் செய்திட முடியும். ஃபைபர் பிராட்பேண்ட் மாற்றாக மேம்பட்ட திறன் நிலையான வயர்லெஸ் இணைப்பை வழங்குகிறது.
இது குறித்து எலிசாவின் தயாரிப்பின் நிர்வாக துணைத் தலைவர் சாமி கொமுலைனென் கூறுகையில், "5ஜி சேவையை பின்லாந்து, உலகிலேயே அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் நாங்கள்தான். 8Gbps வேகத்தை அடைவது எங்கள் 5G வளர்ச்சியில் சாதாரணம்தான்.
மேலும், 5G சலுகைகள், சாத்தியக்கூறுகளை ஆராய விரும்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளோம்" எனத் தெரிவித்தார்