ஹைதராபாத்: உள்நாட்டு பொம்மை சந்தையை மேம்படுத்த பிப்ரவரி 21 முதல் மார்ச் 2, 2021 வரை மாபெரும் மெய்நிகர் கண்காட்சியை இந்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை நடத்தவிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம், உள்நாட்டு உற்பத்தியை பெருக்க பெரும் திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகிறது. இச்சூழலில் பொம்மை சந்தையை வளர்க்க இந்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
அந்த வகையில், பொம்மை செய்பவர்களுக்கான திட்டமிடல், சந்தைப்படுத்துதல், விளம்பரப்படுத்தல் என எல்லா வகையிலும் அரசு உதவி வருகிறது. இச்சூழலில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பான பொம்மைகளுக்கான மெய்நிகர் கண்காட்சியை நடத்த அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த கண்காட்சி பிப்ரவரி 21 முதல் மார்ச் 2, 2021 வரை நடைபெறும் என்று இந்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது.