சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களின் மூலம் பிரபலமடைந்த நிறுவனம், Nord. இந்த நிறுவனத்தின் மூலம் ஒன் பிளஸ் மொபைல்போன், இயர் பட்ஸ், இயர் பட்ஸ் சிஇ மற்றும் வயருடன் கூடிய இயர்போன்களை அறிமுகம் செய்திருந்தது. நடப்பாண்டில் இரண்டாவது காலாண்டில், இதன் சந்தை மதிப்பு இந்தியாவில் 15 சதவீதத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் Nord நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகப்படுத்த உள்ளது. இவை இந்தியாவில் அக்டோபர் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இயர்போன் போன்ற கருவிகளின் ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
மேலும் இந்தியாவில் உள்ளூர் பொருட்களின் நுகர்வோர்களின் எண்ணிக்கை, பொருட்களின் விலையைப் பொறுத்து உள்ளது. இதனால் Nord தனது 30 வகையான மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்திய போதிலும், குறைவான வருவாயை மட்டுமே ஈட்டியுள்ளது என சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Canalys தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புதிய கேமரா மாறுதல்களுடன் வருகிறது ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ