சான் ஃபிரான்சிஸ்கோ(அமெரிக்கா): தவறான, ஆபாசமான மெசேஜ்கள் வாட்ஸ்அப்பில் பரவுவதைத் தடுக்க விரைவில் வாட்ஸ்அப்பில் குரூப் அட்மின்களே அனைவரது மெசேஜ்களையும் டெலிட் செய்யலாம் எனும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய அப்டேட்டை கூகுள் பிளே பீட்டா புரோகிராம் மூலம் ‘2.22.17.12’ என்ற வெர்சனில் இந்தப் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இந்த வசதியின் மூலம், வாட்ஸ்அப் குரூப் அட்மினே அந்த குரூப்பில் யாரேனும் தவறான, இழிவுபடுத்தும் நோக்கத்தில் மெசேஜ் செய்தால் அதை ’Delete For Everyone' ஐத் தேர்வு செய்து குரூப்பை விட்டு அதனை நீக்கிவிடலாம்.
மேலும், அது அந்த குறிப்பிட்ட அட்மினால் நீக்கப்பட்டது என்பதும் அதில் குறிப்பிடப்படும் எனத்தெரிகிறது. சமீபத்தில், புதிய விதிமுறைகளின்கீழ் ஏறத்தாழ 22 லட்சம் தவறான வாட்ஸ்அப் முகவரிகள் கடந்த ஜூன் மாதம் தடைசெய்யப்பட்டது. அதற்கு முந்தைய மே மாதத்தில், 19 லட்சம் முகவரிகளை தடைசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.