பெங்களூரு: செயற்கை நுண்ணறிவு என்பது மென்பொருள் தொடர்பான மனித மூளைக்கு அப்பாற்ப்பட்ட செயல்பாடுகளை செய்ய உதவும் தொழில்நுட்பங்களின் தொகுப்பாகும். குரல், எழுத்து, மொழிப் பெயர்ப்பு, தனிச்சையாக புரிந்துகொள்வது, பதிலளிப்பது, தரவுகளை பகுப்பாய்வு செய்வது, பரிந்துரை அளிப்பது உள்ளிட்ட சேவைகளை வழங்கக்கூடியது.
வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி புதிய சகாப்தத்தை எட்டும் வகையில் அதன் வளர்ச்சி உள்ளது. மிகப்பெரும் மென்பொருள் நிறுவனங்கள் முதல் வணிக நிறுவனங்கள் வரை தங்களது சேவைகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துக்கின்றன. அதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களையும் நிறுவங்கள் செலவிட தயாராக உள்ளன. அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எளிதாகவும், உடனடியாகவும் சேவைகளை வழங்க முடிகிறது.
இருப்பினும், பெரும்பாலான வாடிக்கையாளருக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் வழங்கப்படும் சேவைகளில் நாட்டமில்லை என்பது 2023 Data Privacy Benchmark Study என்னும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு ஆய்வு பெங்களூருவில் இருக்கும் 10 தொழில்நுட்ப நிறுவனங்களின் வாடிக்கையாளர்களிடம் நடத்தப்பட்டது. இந்த நிறுவனங்களின் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை வழங்க 10 நிறுவனங்களும் ஆண்டுக்கு ரூ.200 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடுகின்றன.
உலகளவில் செயற்கை நுண்ணறிவு பெரும் பேசுபொருளாகவும், வரவேற்றபுடையதாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்குமான இடைவெளி நெருக்கமானதாக இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிஸ்கோ துணைத் தலைவரும், தலைமை தனியுரிமை அதிகாரியுமான ஹார்வி ஜாங் கூறுகையில், ஒரு நிறுவனத்தின் தனியுரிமை கொள்கை மற்றும் வெளிப்படைத்தன்மை மட்டுமே 39 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு பிரதானமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் தங்களது தரவுகள் பாதுகாப்பாக இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் முற்றிலும் நம்புவது கிடையாது. இந்த 10 நிறுவனங்களின் 92 சதவீத பேர் வாடிக்கையாளர்கள் எங்களது தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பதில் நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மை உடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
எங்களது தரவுகள் தவறாகவோ அல்லது திருடப்படும் போதோ செயற்கை நுண்ணறிவை காரணம் காட்ட முடியாது. நாங்கள் நிறுவனத்தை மட்டுமே நம்புகிறோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அல்ல என்கின்றனர். அதோடு செயற்கை நுண்ணறிவை மூலம் வழங்கப்படும் சேவைகளில் வாடிக்கையாளர்களுக்கும் திருப்தி இருப்பதில்லை.
ஒரு வாடிக்கையாளர் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கும், வர்த்தக ரீதியாக பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை கவனத்தில் கொள்கின்றனர். ஒட்டுமொத்தமாக பணம், தரவுகள் தொடர்பான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த ஈடுபாடு கிடையாது. காலப்போக்கில் மாறலாம் அல்லது வேறு கொள்களைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூளையின் செயல்பாட்டில் பின்னடைவை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு