ETV Bharat / science-and-technology

மைக்ரோசாஃப்ட்டின் "சர்ஃபேஸ் டியோ 3" சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 டிசைனில் இருக்குமா? - மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் "சர்ஃபேஸ் டியோ 3" ஸ்மார்ட் ஃபோன், சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோனான கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Microsoft
Microsoft
author img

By

Published : Sep 28, 2022, 11:48 AM IST

சான் ஃபிரான்சிஸ்கோ: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது "சர்ஃபேஸ் டியோ 3" எனப்படும் அடுத்த தலைமுறை டூயல் ஸ்கிரீன் ஃபோனை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இந்த மாடலை மைக்ரோசாஃப்ட் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு மடிக்கக்கூடிய (foldable)ஸ்மார்ட்ஃபோனை தயாரித்து வருவதாக மட்டுமே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சர்ஃபேஸ் பிராண்ட் போன்களை உருவாக்குவதாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், சர்ஃபேஸ் டியோ 3-ன் டிசைன் இவ்வாறு இருக்கலாம் என சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது, சர்ஃபேஸ் டியோ 3 ஸ்மார்ட் ஃபோன், சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோனான கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம் என தெரிகிறது.

வெளிப்புற டிசைன் மட்டுமல்லாமல், அதன் பிற அம்சங்களும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் போல இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:அடுத்த மாதத்தில் Nord ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.