உலக அளவில் பிரபலமான டெல் நிறுவனம் தனது புதிய முயற்சியாக ’டெல் லேட்டிடியூட் 7410’ க்ரோம்புக் என்டர்ப்ரைஸ் லேப்டாப்பை சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சிறந்த சாஃப்டவர் கொண்டு தயாரிக்கப்படும் டெல் லேப்டாப்களுக்கு மக்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும். ஏற்கனவே, சமீபத்தில் இந்தியாவில் டெல் நிறுவனம் ஏலியன்வேர் எம்15 ஆர்3, டெல் 5ஜி எஸ்இ, டெல் ஜி15, டெல் ஜி3 15 லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டெல் லேட்டிடியூட் 7410 க்ரோம்புக் என்டர்ப்ரைஸ் லேப்டாப் 1,299 அமெரிக்கா டாலர்களுக்கு விற்பனைக்கு வரவுள்ளது. அதே போல், இதே லேப்டாப் இன்டெல் கோர் ஐ3 பிராஸ்சருடன் விரைவில் வெளியாகவுள்ளது. அதன் விலையாக 1,099 அமெரிக்கா டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த லேப்டாப் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்தும், விலை குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
-
Give your productivity a boost with the new Latitude 7410 with #ChromeEnterprise. https://t.co/4T7BO35742
— Dell (@Dell) August 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
✔️ Sleek design
✔️ Innovative collaboration features
✔️ Extra-long battery life pic.twitter.com/s1iB9MhSyG
">Give your productivity a boost with the new Latitude 7410 with #ChromeEnterprise. https://t.co/4T7BO35742
— Dell (@Dell) August 11, 2020
✔️ Sleek design
✔️ Innovative collaboration features
✔️ Extra-long battery life pic.twitter.com/s1iB9MhSyGGive your productivity a boost with the new Latitude 7410 with #ChromeEnterprise. https://t.co/4T7BO35742
— Dell (@Dell) August 11, 2020
✔️ Sleek design
✔️ Innovative collaboration features
✔️ Extra-long battery life pic.twitter.com/s1iB9MhSyG
டெல் லேட்டிடியூட் 7410 க்ரோம்புக்கின் சிறப்பு அம்சங்கள்:
- லோ ப்ளூ லைட் 14 இன்ச் டிஸ்பிளே
- எல்.டி.இ மொபைல் பிராட்பேண்ட்
- இன்டெல் வைஃபை 6
- இன்டெல் கோர் ஐ7 பிராசஸர்
- துல்லியான 4K காட்சி
- வீடியோ கால்களில் Noise reduction வசதி
- 21 மணி நேரம் பேட்டரி பேக்அப்
- 0 முதல் 35 விழுக்காடை வெறும் 20 நிமிடங்களில் செய்யும் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அதே போல், ஒரு மணி நேரத்தில் 80 விழுக்காடு வரை சார்ஜ் செய்யும் எக்ஸ்ப்ரஸ் சார்ஜ் வசதியும் உள்ளது.
இத்தகைய அதிநவீன வசதிகள் 8.6 விழுக்காடு அளவிற்கு உற்பத்தித்திறனையும் செயல்திறனையும் அதிகரிக்க வழங்குகிறது. எனவே இந்த லேப்டாப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.