ETV Bharat / science-and-technology

விண்ணில் ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல்-1.. இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்!

ADITYA-L1 Update: சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலத்தில் இருக்கும் இரு முக்கிய ஆய்வு கருவிகள் செயல்பாட்டை துவங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ISRO update on adithya l1 spacecraft
விண்ணில் ஆய்வுபணியை தொடங்கிய ஆதித்யா எல்1
author img

By PTI

Published : Dec 2, 2023, 12:21 PM IST

பெங்களூரூ: சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த செப்டம்பர் 2ம் தேதி பி.எஸ்.எல்.வி- சி57 செயற்கைகோள் மூலம் ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது.

  • Aditya-L1 Mission:

    The Solar Wind Ion Spectrometer (SWIS), the second instrument in the Aditya Solar wind Particle Experiment (ASPEX) payload is operational.

    The histogram illustrates the energy variations in proton and alpha particle counts captured by SWIS over 2-days.… pic.twitter.com/I5BRBgeYY5

    — ISRO (@isro) December 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது, பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ துாரம் பயணம் செய்து பூமி மற்றும் சூரியனுக்கு நடுவே அமைந்துள்ள 'எல் 1' எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், ஜனவரி 7ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் 'லெக்ராஞ்சியன்' புள்ளியை சுற்றி நிலைநிறுத்தப்படும் என்று சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆதித்யா எல்-1 குறித்த முக்கிய தகவலை இஸ்ரோ தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “ ஆதித்யா எல்-1 விண்லத்தின் இரண்டாவது முக்கிய கருவியான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (SWIS) என்ற கருவி செயல்பட துவங்கியுள்ளது.

ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. 2 நாட்களில் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியால் கைப்பற்றப்பட்ட புரோட்டான் மற்றும் ஆல்பா துகள் எண்ணிக்கையில் உள்ள ஆற்றல் மாறுபாடுகளை ஹிஸ்டோகிராம் விளக்குகிறது” என தெரிவித்து அதனுடைய மாதிரி படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

மேலும், இஸ்ரோ இது குறித்து விரிவாக கூறுகையில், “ அதித்யா விண்கலத்தில் உள்ள இரு முக்கிய கருவிகளான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (SWIS) மற்றும் சூப்பர் தெர்மல் மற்றும் எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் (STEPS) செயல்பட் தொடங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் 10ம் தேதி STEPS கருவியும், நவம்பர் 2ம் தேதி முதல் SWIS கருவியும் செயல்பாட்டிற்கு வந்த நிலையில், தற்போது இரண்டும் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துகிறது. SWISன் திசை திறன்கள் சோலார் விண்ட் ப்ராப்பர்ட்டீஸில் உள்ள புரோட்டான்கள் மற்றும் ஆல்பாக்களின் துல்லியமான அளவீடுகளை செயல்படுத்துகின்றன.

இதனால் சூரிய காற்றின் பண்புகள், அடிப்படை செயல்முறைகள் மற்றும் பூமியில் அவற்றின் தாக்கம் பற்றிய நீண்டகால கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக விழங்குகிறது” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 80s கனவுக் கன்னி சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.