அறிவியல் ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள் ஆய்வு ஆகியவற்றில் முன்னணி நாடாக இஸ்ரேல் திகழ்கிறது. உலகின் மிகச்சிறிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, தற்போது இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இரு அணுக்கள் அளவு கொண்ட தொழில்நுட்பம்
இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த சிறிய தொழில்நுட்பம் தகவல் சேமிப்பிற்கு பயன்படுகிறது.
போரான் தனிமத்தின் ஒரு அணு, நைட்ரஜன் தனிமத்தின் ஒரு அணு என, இரு அணுக்களைக் கொண்டு இப்புதிய தொழில்நுட்பக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 100 அணுக்கள் அளவு தடிமன் கொண்ட தொழில்நுட்பமே சிறியதாக இருந்த நிலையில், இந்தப் புதிய கண்டுபிடிப்பு மின்னணு கருவிகள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சிறிய தொழில்நுட்பம் மூலம் எலகட்ரானிக் கருவிகளின் வேகம், செயல்திறன் அதிகரித்து ஆற்றல் நுகர்வு குறைக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தேசிய மருத்துவர் தினம்- யார் இந்த பி.சி ராய்!