சான் பிராசிஸ்கோ: கூகுள் நிறுவனம், சிறிய திரையுடன் கூடிய புதிய பிக்சல் மினி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. கிஜ்மோசீனாவின் கூற்றுப்படி, இது 'நெய்லா' (Neila) என்ற பெயருடன் வெளியாகும் என அறியப்படுகிறது. இது பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே (Punch-hole Display) மற்றும் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 7 வகைகளை ஒத்ததாக இருக்கும்.
ஆனால் இது பிக்சல் 7 போல் இருக்குமா என்பது சந்தேகத்தில் உள்ளதால், பிக்சல் 7 மினி என அழைக்கப்படுகிறது. இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, வரவிருக்கும் கூகுள் தயாரிப்புகள் அனைத்தும் பொதுவாகவே கோட்பேஸில் அமைக்கப்படுகின்றன.
இதனிடையே கூகுள் தனது இரண்டாவது தலைமுறை சிப் மற்றும் பிக்சல் வாட்ச் கொண்ட புதிய பிக்சல் 7 ஸ்மார்ட்போன்களை அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிக்க உள்ளது. மேலும் நடைபெற்ற பிக்சல் 7 சீரிஸின் இரண்டாம் தலைமுறை டென்சர் ஜி2 சிப்பில் இயங்கும் என கூகுள் உறுதி செய்துள்ளது.
அதேநேரம் டென்சர் சிப், சாம்சங் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது கூகுளின் இயந்திர திறமையுடன் Exynos போன்ற செயலிகளை மேம்படுத்துகிறது.
இதையும் படிங்க: புதிய மேம்படுத்தப்பட்ட பிரைவசி அம்சங்களுடன் ஆப்பிள் iOS 16 அறிமுகம்!