சாம்சங் கேலக்ஸி எஸ்23, கேலக்ஸி எஸ்22ஐ விட சற்று தடிமனான பெசல்களுடன் (Bezels) வரவுள்ளது. இதில் உள்ள நான்கு பெசல்களும் 0.15 மிமீ அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்23, ஏற்கனவே இருக்கும் மாடலை விட சற்று நீளமாகவும் அகலமாகவும் இருக்கும்.
இந்த எஸ்23 சீரிஸில் எஸ்23, எஸ்23+ மற்றும் எஸ்23 அல்ட்ரா ஆகிய மூன்று மாடல்களோடு சந்தையில் வர உள்ளது. மொபைலின் பின்புறத்தில் 200 MP முதன்மை சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் Snapdragon 8+ Gen 2 Soc உடன் இந்த மொபைல் இயங்க உள்ளது.
இதையும் படிங்க: புதிய மேம்படுத்தப்பட்ட பிரைவசி அம்சங்களுடன் ஆப்பிள் iOS 16 அறிமுகம்!