உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், ஐஓடி தயாரிப்புகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 35 தயாரிப்புகளில் 26 தயாரிப்புகள் அனைத்து வகையான பொதுமக்களிடமும் பயன்பாட்டில் உள்ளன. எட்ஜ் ஐஓடி, கிளைவ்ட் ஐஓடி ஆகியவற்றில் மைக்ரோசாப்ட் தயாரிப்புகளே பயன்படுத்தப்படுகின்றன.
மைக்ரோசாப்ட்டை தொடர்ந்து அமேசான் வெப் சர்வீஸஸ் நிறுவனம், 35 தயாரிப்புகளில் 10 தயாரிப்புகள் முன்னணியில் உள்ளன. மூன்றாவது இடத்தில் ஹவாய் நிறுவனம் உள்ளது. கவுண்டர் பாய்ண்ட் ஆராய்ச்சியின்படி, ஐஓடி தயாரிப்புகளில் 20 நிறுவனங்களில் முன்னணியில் உள்ளன.
இதுகுறித்து கவுண்டர் பாய்ண்ட் ஆராய்ச்சி நிறுவனத்தின் நெய்ல் ஷா பேசுகையில், ''ஐஓடி இயங்குதளங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. டிஜிட்டல் வகையிலான பரிமாற்றத்திற்கு அரசுகளுக்கு ஐஓடி தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன'' என்றார்.
இதையும் படிங்க: அந்நியர்களிடம் சிக்காமல் இருக்க ஃபேஸ்புக்கின் புதிய வசதி