சீனாவில் ஹுவாவே மேட் எக்ஸ் (Mate X) ஸ்மார்ட்போன் வெளியீட்டு விழாவில், அடுத்ததாக வெளியுடவுள்ள ஹுவாவே மேட் எக்ஸ் எஸ் அறிமுகத்தை சிறப்பிக்கும் ஒரு ஸ்லைடை திரையில் காண்பித்தனர். இந்த ஸ்மார்ட்போன் ஹுவாவே மேட் எக்ஸ்-ல் இடம்பெற்றுள்ள ஹைசிலிகான் கிரின் 980 SoC எனப்படும் செயலியின் அடுத்த பதிப்பான ஹுவாவே மேட் எக்ஸ் எஸ்-ல் ஹைசிலிகான் கிரின் 990 SoC எனப்படும் செயலி பொருத்தப்பட்டுள்ளது மேலும் ஒருங்கிணைந்த 5ஜி மோடமை உள்ளடக்கியது.
புதிய ஹுவாவே மேட் எக்ஸ் எஸ் கிரின் 990 SoC ஐ உறுதிப்படுத்துவதைத் தவிர மேட் எக்ஸ் எஸ்ஸின் எந்த முக்கிய அம்சங்களையும் விவரக்குறிப்புகளையும் ஹுவாவே குறிப்பிடவில்லை. இருப்பினும் ஸ்மார்ட்போன் மேட் எக்ஸ் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கிறது.
ஆரம்பத்தில் ஹுவாவே சீனாவில் மேட் எக்ஸ்-ஐ அறிமுகப்படுத்தியது, இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளுக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் நடப்பு மாத தொடக்கத்தில், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸிக்கு எதிராகப் போட்டியிடுகிறது.
இதையும் படிக்க: #MiMIXAlpha : ‘பட்டனும் இல்லை, பிடிக்க இடமும் இல்லை’ - அதிரடி காட்டும் மீ மிக்ஸ்!