டெல்லி: கணினிகள், மடிக்கணினிகள், கணினி உதிரிபாகங்கள் உற்பத்தில் முன்னணி நிறுவனமான டெல், தனது புதிய மடிக்கணினி மாடல்களான ஏலியன்வேர் எம்15 ஆர்5, எம்15 ஆர்6 இரண்டையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இவற்றை Dell.com இணைதளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம். இந்த இரண்டு மடிக்கணினிகளும் 11ஆம் தலைமுறை இன்டெல் கோர் செயலிகள், என்விடியா (NVIDIA) ஆர்டிஎக்ஸ் 30 ரக கிராபிக்ஸ், ஏஎம்டி இயங்குதளம் ஆகிய முக்கிய சிறப்பம்சங்களைக் கொண்டதாகும்.
ஏலியன்வேர் எம்15 ஆர்5 சிறப்பம்சங்கள்
- ரைசன் எடிஷன் கேமிங் மடிக்கணினி
- விண்டோஸ் 10 பயன்பாடு
- 15.6 அங்குல முழு எச்டி(1,920x1,080 பிக்சல்கள்) திரை
- 165Hz ரெப்ரெஷ் ரேட், 300 நிட் பிரைட்னஸ்
- ஏஎம்டி ரைசன் R7 5800H இயங்குதளம்
- 16 ஜிபி ரேம், 4 டிபி ரோம்
- 6 ஜிபி GDDR6 VRAM கிராபிக்ஸ் கார்டு
- 86Whr பேட்டரி
- விலை 1,34,990 ரூபாய்
ஏலியன்வேர் எம்15 ஆர்6 கேமிங் சிறப்பம்சங்கள்
- 15.6 அங்குல குவாட் எச்டி (2,560x1,440 பிக்சல்கள்) திரை
- 240Hz ரெப்ரெஷ் ரேட், 400 நிட் பிரைட்னஸ்
- 11ஆவது தலைமமுறை இன்டெல் கோர் i7-11800H சிபியு
- 8 ஜிபி GDDR6 VRAM கிராபிக்ஸ் கார்டு
- 16 ஜிபி ரேம், 2 டிபி ரோம்
- 4 தண்டர்போல்ட் போர்ட்
- 86Whr பேட்டரி
- விலை 1,59,990 ரூபாய்
இதையும் படிங்க: CES 2021: ஹெச்பி எலைட் புக் 840 ஏரோ ஜி8 சிறப்பம்சங்கள்!