ETV Bharat / science-and-technology

ரூ.9,900க்கு ஆப்பிளின் ஹோம்பாட் மினி!

author img

By

Published : Oct 15, 2020, 6:31 PM IST

Updated : Feb 16, 2021, 7:52 PM IST

ஆப்பிள் இயங்குதள உதவியாளராக செயல்படும் ‘சிரி (Siri)’ மூலம் இயங்கும் ஸ்மார்ட் ஒலிப்பெருக்கியான ஹோம் பாட் மினியை ஆப்பிள் வெளியிட்டுள்ளது. ஹோம் பாட்டின் மினியேச்சர் பதிப்பு புதிய வட்டக் கிண்ண வடிவத்தைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்காக மெஷ் (Mesh) துணியால் இந்த ஹோம்பாட் மூடப்பட்டிருக்கிறது.

Apple HomePod mini
ஆப்பிள் ஹோம் பாட் மினி

கலிபோர்னியா : ஆப்பிள் தயாரிப்புகள் வெளியீட்டு நிகழ்வில் ஸ்மார்ட் ஒலிப்பெருக்கியான ஹோம் பாட் மினியை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் ஒலிப்பெருக்கி, 360 டிகிரி அலைவரிசையை வழங்குகிறது. ஹோம் பாட் மினி ஆப்பிளின் எஸ் 5 சிப்பால் இயக்கப்படுகிறது. ஏர்ப்ளே 2 மல்டி-ரூம் திறன்களையும் இந்த ஹோம் பாட் மினி ஆதரிக்கிறது. இதன்மூலம் பல ஒலிபெருக்கிகளை இதில் இணைத்துக் கொள்ளலாம். கிண்ன வடிவிலான இதன் தோற்றம், மெஷ் துணியால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட் சாதனம், இசையைப் பகுப்பாய்வு செய்து சத்தம், டைனமிக் வீச்சு போன்றவற்றை மேம்படுத்தும் திறனையும் கொண்டது என ஆப்பிள் தெரிவித்துள்ளது. கூடுதலாக, இது ஆப்பிள் கார்ப்ளே உடனும் (Apple CarPlay) வேலை செய்கிறது. இந்தியத் தகவல் சாதன சந்தையில் இதன் மதிப்பை 9,900 ரூபாயாக ஆப்பிள் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

ஹோம் பாட் மினி புகைப்படங்கள்

  • Apple HomePod mini

Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.