சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி அதன் இணை பிராண்டான போகோ ஸ்மார்ட்போனின் இரண்டாவது மாடலான போகோ எக்ஸ் 2-வில் (Poco X2) ஆண்ட்ராய்ட் 11 அப்டேட்டுக்கு புதுப்பிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போகோ எக்ஸ் 2-வில் ஆண்ட்ராய்ட் 10 வசதி மட்டுமிருந்தது. ஆனாலும் போகோவின் MIUI-இல் ஆண்ட்ராய்ட் 11க்கான SoC இயங்கிக் கொண்டிருந்தது. அதுபற்றி சியோமி நிறுவனம் ஆண்ட்ராய்டு 11-க்கு போகோ புதுப்பிக்கப்படும்போது அதனைப் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்தது.
இந்நிலையில், இன்று சியோமி நிறுவனம் போகோ எக்ஸ் 2-வில் ஆண்ட்ராய்ட் 11 அப்டேட் புதுப்பிக்கப்போவதாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அந்நிறுவனம் ஆண்ட்ராய்ட் 11 புதுப்பிக்கப்பட்ட போகோ ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள போகோ எக்ஸ் 2 ஆண்ட்ராய்ட் 10 சிறப்பம்சங்கள்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் இயக்ககம், கைரேகை ஸ்கேனர்.
- 4,500mAh 4W எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி.
- முழு ஹெச்.டி. + தெளிவுத்திறன் 2400x1080 பிக்சல்கள் கொண்ட 6.67 இன்ச் தொடுதிரை. 20:9 விகித ஹெச்.டி.ஆர். 10 வசதி.
- கூடுதல் சேமிப்பகம் கொண்டது, குறைந்தபட்சம் 6 ஜிபி ராம், 64 ஜிபி ரோம் நினைவகம். அதிகபட்சம் 6 ஜிபி ராம், 128 ஜிபி ரோம் நினைவகம்
- 64 மெகாபிக்சல் வசதியுடன் முதன்மை குவாட் கேமரா.
- 20 மெகாபிக்சல் முன் கேமராவுடன் 2 மெகாபிக்சல் depth உணர்வி (சென்சார்) வசதி.
போகோ எக்ஸ் 2 ஆண்ட்ராய்ட் 10 விலை
- அடிப்படை மாடல் 15 ஆயிரத்து 999 ரூபாய்.
- டாப்-எண்ட் மாடல் 19 ஆயிரத்து 999 ரூபாய்.
இந்த மாடல் பிப்ரவரி 25 முதல் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் அறிமுகமான ரியல் மீ எக்ஸ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்