இன்றைய காலகட்டத்தில், யாரோ ஒருவரிடம் வழி கேட்பதைவிட கூகுள் மேப் மூலம் செல்ல வேண்டிய இலக்கை அடையவே மக்கள் விரும்புகிறார்கள். கூகுள் மேப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருவதற்கு இதுவே காரணம்.
பயனாளர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்துவருகிறது.
இந்நிலையில், கூகுள் மேப் செயலியின் அடுத்த வெர்ஷனில் ஆண்ட்ராய்டு பயனாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிதாக டார்க் மோட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல், கூகுள் நிறுவனம் டார்க் மோட் அம்சத்தைச் சோதித்துவருகிறது. நைட் மோட் வசதி மூலம், பயனாளர்கள் கண்களுக்கு ஓய்வு கிடைப்பது மட்டுமின்றி ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் நீடிக்கிறது.
இந்த வசதியைப் பெற ஒவ்வொருவரும் தங்களது கூகுள் மேப் செயலியின் 10.61.2 வெர்ஷனை, ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்திட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். கூடுதலாக, கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கடவுச்சொல் சரிபார்ப்பு அம்சத்தையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒஎல்இடி டிஸ்பிளேவுடன் வரும் ஆப்பிள் 'ஐபாட் ஏர்' சாதனம்