கோவிட்-19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஒரே இடத்தில் அதிகம் பேர் அமரும் சூழ்நிலை உள்ளதால், தற்போது வரை திரையரங்குகளுக்கு எவ்வித தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், இந்த ஊரடங்கு காலத்தில் அமேசான், ஹாட் ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஆனால், திரையரங்குகளில் இது சாத்தியமில்லை என்பதால், பெரும்பாலான பொதுமக்கள் தற்போது ஓடிடி தளங்களிலேயே திரைப்படங்களைப் பார்க்க விரும்புகின்றனர்.
இது குறித்து MoMagic என்ற நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில், நான்கில் மூன்று இந்தியர்கள் திரையரங்கிற்குப் பதிலாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களிலேயே திரைப்படங்களைப் பார்க்க விரும்புவது தெரியவந்துள்ளது.
இது குறித்து MoMagic நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அருண் குப்தா கூறுகையில், "டிக்கெட்டின் விலைக்கு 71 விழுக்காட்டினர் முக்கியத்துவம் அளிக்கின்றனர். 72 விழுக்காட்டினர் தங்களுக்குப் பிடித்த படங்களைப் பார்க்க ஒரு பெரிய தொலைக்காட்சி வாங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க...இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை!