சான் ஃபிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டு பிற்பகுதியில் M2 சிப்புடன் பல புதிய மேக்ஸை (Macs) அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
13-இன்ச் மேக்புக் புரோ, மேக் மினி, 24-இன்ச் ஐமேக், மறுவடிவமைப்புச் செய்யப்பட்ட மேக்புக் ஏர் ஆகியவற்றை நிறுவனம் அறிமுகம்செய்துள்ளதாக 'பவர்ஆன்' மின் இதழில் மார்க் குர்மன் குறிப்பிட்டுள்ளார்.
இவை அனைத்தும் வதந்தியான M2 சிப்பில் பொருத்தப்பட்டதாக தி வெர்ஜ் குறிப்பிடுகிறது. M2 இந்தாண்டு கொண்டுவரப்படும் என்று நம்பப்படுகிறது. இது M1-க்கு மாற்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த M2 சிப் ஆனது M1 போன்றே 8-கோர் சிபியு (8-core CPU) கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது சிறிய Node இல் கட்டமைக்கப்படுவதால், இதன் வேகம், செயல்திறன் மேம்பட்டதாக இருக்கும்.
இதில் கூடுதலாக ஜிபியு (GPU) கோர் இருக்கும் என்று தெரிகிறது. ஜிபியு என்பது உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள், காணொலிகளை ஒரே நேரத்தில் விரைவாக வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.
M2 வின் ஜிபியுவானது M1 சிப்பின் 7 மற்றும் 8 கோர் லிருந்து 9 மற்றும் 10 கோர் ஆக மேம்படுத்தப்பட்டிருக்கும். தைவானின் குறைகடத்திப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான டி.எஸ்.எம்.சி. (TSMC) அதன் முதல் 3nm சிப்களை 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது.
நிக்கெய் ஆசியா கருத்தின்படி, புதிய ஐ-பேட்களில் பயன்படுத்துவதற்கு முதலில் இவை ஆப்பிள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். புதிய Macs மார்ச்சில் ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்படும் என்று குர்மன் கூறுகிறார்.
5G iPhone SE, 5G iPad Air, ஒரு புதிய மேக் ஆகியவை மார்ச் 8இல் நடைபெறுவதாகக் கூறப்படும் ஒரு நிகழ்வில், ஆப்பிள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் iOS 15.4 ஐ, ஃபேஸ் ஐடியுடன் வரும் மார்ச் மாதத்தில் நிறுவனம் வெளியிட உள்ளது.
இதையும் படிங்க: வெறும் 45 விநாடிகளில் ரூ.1.75 கோடி சம்பாதித்த இளம் யூ-ட்யூபர்!